பக்கம்:சரணம் சரணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சரணம் சரணம்

அம்பிகை அமுதக்கடலின் நடுவில் மணித்வீபத்தில் கடம்பவனத்தில் எழுந்தருளியிருக்கிருள். அங்கே பேரழகி பாக வீற்றிருக்கிருள். கடம்பாட வியில் திவ்ய தரிசனம் தந்து தோன்றிய எம்பெருமாட்டியின் பேரழகைது, அபிராமிபட்டர் வருணிக்கப் புகுகிறார். எதைச் சொல் வது? எதை விடுவது?

வேதம் முதலிய நூல்களே அவள் . பேரழகை முற்றும் . செல்ல முடியாதபடி திண்டாடும்போது மனிதர்கள் எம் ‘த்ர்த்திரம்? ஆளுல் பக்தர்கள் அப்படி நினைக்கிறதில்லை. அவள் அழகாகிய கடல் முழுவதையும் உண்ண முடியாது. அது வற்றாத சமுத்திரம். ஆல்ை அந்த அழகை நம் முடைய கண்ணிலும் கருத்திலும் நிரப்பிக்கொள்ளலாம் அல்லவா? அது போதுமே! அப்போது வேறு பார்வையும் வேறு எண்ணமும் எழ நியாயம் இல்லையே! அந்த மனே லயத்தில் உண்டாகும் இன்பம் இணையற்றதல்லவா?

சின்ன வயிறு என்றும், பெரிய வயிறு என்றும் வயிறுகளில் வேறுபாடு உண்டு. உண்ணும் உணவோ அளவில்லாமல் குவிந்து கிடக்கிறது. பசிக்கிறவனுக்குத் தன் வயிறு நிரம்பு, வதுதான் முக்கியமே ஒழிய, உணவு முழுவதையும் உண்டு விட வேண்டுமென்பது அல்லவே! அது நடக்கக்கூடிய காரியமா? -

ஆகவே அபிராமிபட்டர் எடுத்துக்கொண்ட பாட் டின் அளவில் எம்பெருமாட்டியின் பேரழகை அநுபவிக் கிறார்.

எம்பெருமாட்டிதன் பேரழகே.

கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் என்கிறார். அவள் பேரழகு எப்படி இருக்கிறது?

கடம்பா,வியில் தோற்றம் அளிக்கிருள் அப்பிராட்டி. அவள்கையில் வீணே இருக்கிறது. அதிலிருந்து எழும் பண் கள் உள் ளத்தைக் கொள்ளே கொள்கின்றன. அதைக் கேண்டுகளிக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/168&oldid=680546" இலிருந்து மீள்விக்கப்பட்டது