பக்கம்:சரணம் சரணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு கொண்ட அழகு - #59

பண் களிக்கும் குரல் வீணையும்

என்கிறர். வீறுமிக்கமா வீணுகரே என்று திருப்புகழில் வருகிறது. -

அவளுடைய திருக்கரத்தில் அந்த வீணே ஒளிர்கிறது. விணயும் கையும் இணந்து காட்சி அளிக்கின்றன.

பண் களிக்கும் குரல் வீணேயும் கையும். இதற்கு வேறு ஒரு வகையிலும் பொருள் கொள்ள லாம். பண்களெல்லாம் அவளுடைய குரலேக் கண்டு ஆகா என்ன இனிமை என்று களிப்பதற்குரிய குரலாகிய வீணே என்றும் பொருள் கொள்ளலாம். எப்போதும் வேதகானம் செய்யும் சிவபெருமான் கண்டத்தை, யாழ் கெழு மணிமிடற்று அந்தணன்?’ என்று அகநானூறு கூறு கிறது. ஆதலின் இனிய குரலே உடைய கண்டத்துக்கு வீணேயை உவமை கூறுவதுண்டென்று தெரியவருகிறது. அம்பிகையின் குரல், வீணேயின் நாதத்தையும் தாழச் செய்யும் இனிமையையுடையது. ஸெளந்தர்ய லஹரியில் இப்படி ஒரு காட்சியைச் சங்கராச ரிய சுவாமிகள் அருளு கிறார், கலேமகள் அம்பிகையின் சந்நிதியில் வீணேயை வாசித்தாள். கலேஞர் களேப் பாராட்டிகுல்தான் அவர் களுக்கு ஊக்கம் பிறக்கும்; கலேயும் வளரும். அதல்ை அம்பிகை கலைமகளின் வீணே யொலியைக் கேட்டு, ‘நன்றாக இருக்கிறது!’ என்று பாராட்டினுளாம். அந்தப் பாராட்டி குல் மேலும் ஊக்கம் அடைந்து பாடவேண்டிய வளல்லவா கலைமகள்? அவள் அப்படிச் செய்யவில்லை. வீணேயை உறை புள் போட்டுவிட்டாள். அம்பிகையின் குரலே இவ்வளவு இனிமையாக இருக்கும்போது, இவளுக்கு முன் இந்த வீணையை வாசிப்பதா?’ என்று நாணி அப்படிச் செய் தாளாம்.

ஆகவே பண்களெல்லாம் களிக்கும்படியான விணே போன்ற குரலுடையவள் என்று கொள்வது பொருந்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/169&oldid=680547" இலிருந்து மீள்விக்கப்பட்டது