பக்கம்:சரணம் சரணம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவம் புரிந்தவர்களின் அடையாளங்கள் 7

கர்ம பலனே எதிர்பாராத வகையில் இன்பத்தையும் தரு கிறது; துன்பத்தையும் திருகிறது. ஒரே நாளில் ஒருவன் லட்சாதிபதியாகி விடுகிருன், கண்முன்னே அதைப் பார்க்கிருேம். இதற்கு முன்னப் பிறவியில் அவன் செய்த செயல்களே காரணம். நல்ல செயல்களைச் செய்பவர்கள் குறைவாக இருப்பதல்ை, அவற்றின் பயனுக வரும் வளி வர்ழ்வைப் பெறுகிறவர்களும் குறைவாகவே இருக் கிறார்கள். நல்ல விதை குறைவாகப் போட்டுப் பயிரை வளர்த்தால் குறைந்த பயிரே விளேயும்; களைகள் மண்டும். அவ்வாறே புண்ணியச் செயல்கள் செய்தவர்கள் குறைந்த அளவில் இருப்பதல்ை செல்வத்தை அடை.பவர்களும் குறைவாகவே இருக்கிறார்கள். திருவள்ளுவர் கூறுவதைக் கேட்கலாம்.

‘இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்’

என்பது கிருக்குறள். வசதியான வாழ்வு இல்லாத வறிய வர்கள் உலகத்தில் பலராக இருப்பதற்குரிய காரணம் தவம் செய்பவர்கள் சிலர்; தவும் செய்யாதவர்களே பலர்’ என்பது இதன் பொருள். முன்னேப் பிறவியில் செய்த தவத்தால் இப்பிறவியில் நன்மை உண்டாகிறது. நன்மை பெறுகிறவர்கள் குறைவு என்றால் அதற்குக் காரணமான புண்ணியத்தைச் செய்தவர்களும் குறைவு என்று தெரிந்து கொள்ள வேண்டும். -

நோற்பார் என்பது தவம் செய்பவரைக் குறிக்கும். தவம் என்பது காட்டுக்குப் போய்த் தனியே இருந்து யோகம் செய்வது மட்டும் அன்று. தன் நலத்தை மறந்து விட்டுப் பிறர் நலத்தையே பெரிதாக எண்ணி ஒருவன் தியாக வாழ்க்கை வாழ்ந்தால், அவனேத் தவமுனிவன் என்றே சொல்ல வேண்டும். இறைவனிடம் பக்தி பண்ணி நன்னெறியில் நிற்பதும் ஒருவகைத் தவமே. இவ்வாறு தவம் பலவகைகளில் மேற் கொள்வதற்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/17&oldid=680548" இலிருந்து மீள்விக்கப்பட்டது