பக்கம்:சரணம் சரணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சரணம் சரணம்

விணேயையும் கையையும் தரிசித்தவர், அம்பிகைக்குக் குழந்தையாகையால் ஞானப்பாலேத் தரும் தனங்களைத் தரிசிக்கிறார்.

பயோதரமும்.

இப்படியே அங்கங்களேச் சொல்லிக்கொண்டு போக நேரம் ஏது? எல்லேதான் ஏது? ஆகவே பிழம்பாக, சமு தாய சோபையாக, அவளுடைய திருமேனி வண்ணத்தை அடுத்தபடியாகச் சொல்கிறர். சியாம நிறம் என்பது ஒரு வகைப் பச்சை வண்ணம். அதைக் கண்டால் கண் குளிரும். பச்சையென்றல் குளிர்ச்சிக்கு அறிகுறிதானே? பூமியெல்லாம் பச்சைப் பசேலென்று பயிர்கள் நிரம்பி யிருந்தால் கண்ணுக்கு அழகாக இருக்கிறது. அம்பிகை யின் பச்சை வண்ணம் உலகில் உள்ளோர் யாரும் கண்டு களிக்கும்படி இருக்கிறது. அவளுடைய பச்சை வண்ணம் எங்கே தோன்றிலுைம் அது அழகாக இருக்கிறது. அது பசும்பயிரில் தோன்றுகிறது; பசிய மரத்தில் தோன்று கிறது; கர்ப்ப மகளிரின் நாடிகளில் தோன்றுகிறது; கடலில் தோன்றுகிறது; கிளியினிடம் காண்கிறது. எல் லாம் அழகு. பச்சையில்லாத நிலம் வெறிச்சோடிக் கிடக் கும். ஆகையால் அம்பிகையின் பச்சை வண்ணத்தை, ‘மண் களிக்கும் பச்சைவண்ணம்’ என்கிறார் ஆசிரியர்.

மண் களிக்கும் பச்சை வண்ண மும்

இத்தகைய கோலத்தில், அம்பிகை மதங்க முனிவரின் பெண்ணுகத் தோன்றினுள். அதல்ை மாதங்கி என்று பெயர் வந்தது. வீணேயைப் பாடிப் பிழைக்கும் ஒரு குலத் துக்கு மதங்கர் குலம் என்று பெயர். அவர்களேத் தமிழில் யாழ்ப்பாணர் என்பர். அந்தக் குலத்தில் அவள் திருவ வதாரம் செய்தமையாலும் அப்பெருமாட்டிக்கு மாதங்கி என்று திருநாமம் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/170&oldid=680549" இலிருந்து மீள்விக்கப்பட்டது