பக்கம்:சரணம் சரணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 - சரணம் சரணம்

கண் களிக்கும்படி கண்டு, கொண்டேன் என்கிறார். கண்டு கொண்டேன் என்பதை ஒரு செயலாக எண்ண்க்கூடாது காண்பது முதல் செயல்; அடுத்தது. கொள்வது; உட்கொள்ளுவது அதாவது அந்த வடிவத்தை உள்ளே தரிசித்துத் தியானித்தல்.

இராமலிங்க சுவாமிகள் சொல்கிரு.ர். ‘களக்கமறப் பொது நடம்நான் கண்டுகொண்ட தருணம. கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்த

தொரு காய்தான்’’. என்கிறார். கண்டபிறகு உள்ளே கொண்டதல்ை உள்ளம் மலர்ந்ததாம்; மேலே காய்த்ததாம். அருணகிரிநாதரும் இப்படிச் சொல்கிறார், -

கேந்தன் என்றுற்று உனேநாளும்

கண்டு கொண்டு இன்புற் றிடுவேனே??? தினந்தோறும் கண்ணுல் கண்டு, கண்டதை உள்ளத்தே கொண்டு, தியானம் செய்தால் இன்பத்தை அடையலாம்.

கற்கண்டைக் காண்கிருேம். அது கல்லேப்போலத். தெரிகிறது. படிக்காரத்திற்கும் அதற்கும் வேறுபாடு தெரிகிறதில்லே. ஆல்ை அதை வாயில் போட்டுச் சுவைக் கத் தொடங்கில்ைதான் அது கரைந்து தன் சுவையைக் காட்டுகிறது. அதுபோல நாம் கானும் விக்கிரகங்கள் வெறும் வடிவமாகக் காட்சியளிக்கின்றன. அந்த வடி வத்தை உண் முகமாக்கித் தியானம் செய்யப் புகுந்தால் அந்த வடிவம் தேசுடையதாக மாறிச் சொல்ல வொண்ணு. இன்பத்தைத் தரும். -

இந்த அநுபவத்தைப் பெற்ற அபிராமி பட்டர் கண்டேன் என்று மட்டும் சொல்லவில்லே; கண்டு கொண் டேன்’ என்று சொன்னர். இரண்டும் ஒரே நிலை அல்ல. காண்பது ஒரு நிலை; அது கண்ணின் காரியம். கொள்வது ஒரு நிலை; அது மனத்தின் காரியம். கண்ணும் கருத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/172&oldid=680551" இலிருந்து மீள்விக்கப்பட்டது