பக்கம்:சரணம் சரணம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு கொண்ட அழகு 163:

ஒன்றுபட வேண்டும். கண் வழியே உள்ளத்தில் வடிவம் செல்லவேண்டும் இத்தகைய அற்புத அநுபவத்தில் கை வந்த அபிராமி பட்டர் பாட்டும் அற்புதமாக இருக்கிறது. கண்களிக் கும்படி கண்டுகொண் டேன்கடம்

பாடவியில் பண்களிக் கும்.குரல் வீணையும் கையும்

பயோ தரமும் - மண்களிக் கும்பச்சை வண்ணமும் ஆகி

மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன்

பேரழகே.

(கடம்பவனத்தில், இராகங்கள் நம்மைவிட இனிமை, யாக இருக்கின்றது என்று கேட்டுக் களிக்கும் குரலாகிய வீணேயும், திருக்கரங்களும். திருத்தனமும், உலகத்தோர் தரிசித்து மகிழும் பச்சை நிறமும் ஆக எழுந்தருளி, யாழ்ப்பாணராகிய மதங்கர் குலத்தில் உதித்த பெண் களில் ஒருத்தியாகத் திருவவதாரம் செய்த எம்பெரு. மாட்டியாகிய சியாமளாதேவியின் எங்கும் காணுத பேரழகை, அடியேன் கண்டு களிக்கும்படி தரிசித்துப் பின்பு உள்ளத்தே தியானப் பொருளாகக் கொண்டேன்.

கடம்பாடவி-மதுரை என்றும் சொல்லலாம். குரல் வீணே. உருவகம். பயோதரம்-நகில்; கருண்யாகியபாலத் தாங்குவது. மண்-உலகத்தோர்; ஆகுபெயர். பெண்களில்பெண்களில் ஒருத்தியாக, பெண்களைப் போல என்றும் சொல்லலாம். -

பேரழகே கண்டு கொண்டேன். கடம் பாடவியில் தோற்றிய எம்பெருமாட்டி, வீணேயும் கையும் பயோதர மும் பச்சை வண்ணமும் ஆகித் தோன்றிய எம்பெரு, மாட்டி என்று கூட்டுக.)

இது அபிராமி அந்தாதியில்70-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/173&oldid=680552" இலிருந்து மீள்விக்கப்பட்டது