பக்கம்:சரணம் சரணம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை?

‘இன்றைக்கு மனசு என்னவோமாதிரி இருக்கிறது: என்று நாம் சில சமயங்களில் சொல்லுகிருேம் மனத்தில் அமைதி இல்லாதபோது அப்படி ஒரு நினைப்புத் தோன்று வது இயல்பு. நமக்குத்தான் அப்படி என்றால் மிகவும் படித்தவர்களுக்கும், நிறையப் பொருளை உடையவர்களுக் கும் கூட மனத்தில் அப்படி ஒரு நில வரும். இதை மனத் தில் ஊக்கமில்லாத இறக்கம் (Mental depression) grgrg சொல்வார்கள்.

அருளாளர்களுக்குக்கூட இப்படி ஒரு நிலை வரும் போலும்! அவர்களுடைய பாடல்களில் அடிக்கடி தங் களேத் தாங்களே தேற்றிக்கொள்ளும் பகுதிகள் இருக்கின் றன. இறைவனுடைய அருளுக்கு ஆட்பட்ட அவர்களுக்கு அப்படி உண்டாவதற்கும் ஒரு நியாயம் இருக்கிறது.

மடியில் கனம் உடையவனுக்கு வழியில் பயம் உண்டு. அதுபோல, அவர்கள் மிகப் பெரிய செல்வமாகிய அருளேப் பெற்றவர்கள். அதல்ை யாரும் அடையாத உயர்ந்த நிலை எயில் இருப்பார்கள். இருந்தபோதிலும் பிராரப்த வினே என்பது ஒன்று இருக்கிறது. அதல்ை ஏதேனும் சிறிதள வாவது தவறு நேருமோ, இறைவனே ஒரு கணமேனும் மறக்க நேருமோ என்று தோன்றும். .

அதல்ை அவர்கள் தம்மைத் தாமே ஜாக்கிரதைப் படுத்திக் கொள்வார்கள். பக்தர்கள் ஒரு சமயம் மகிழ்ச்சி பயின் உச்சநிலையில் இருப்பார்கள். மறு சமயம் இறைவன் நம்மை மறந்து விடுவானே என்று தவிப்பார்கள். வேறு ஒரு சமயம் உலகமாயை எங்கேனும் இடையிலே புகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/174&oldid=680553" இலிருந்து மீள்விக்கப்பட்டது