பக்கம்:சரணம் சரணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-166, சரணம் சரணம்

ஆலய த்ரிசனம் செய்துவிட்டு வீட்டை அடைந்த போது சிஷ்யர்கள், தேவரீர் அழுதது ஏன்?’ என்று கேட் டார்கள். அந்தப் பெண்பிள்ளே ஆண்டவனுக்குத் தொண்டு செய்யத் தவறினுள் என்று அடித்து வேலை வாங்குகிறார்கள். என்னே யாராவது இப்படித் தண்டித்

திருந்தால் எப்பொழுதோ உயர்ந்திருப்பேனே ?? என்றாராம்.

அதுபோல, எவ்வளவோ காலத்தை வீனகப்

போக்கிவிட்டோமே!’ என்று நெஞ்சு நைந்து சாம்பும் மகாபக்தர்கள் இருக்கிறார்கள்.

பாலனய்க் கழிந்த நாளும்

பனிமலர்க் கோதை யார்தம் மேலய்ைக் கழிந்த நாளும்

மெலிவொடு மூப்பு வந்து கோலனுய்க் கழித்த நாளும்

குறிக்கோள் இலாது கெட்டேன்; சேலுலாம் பழன வேலித்

திருக்கொண்டீச் சரத்து ளானே??

என்று அப்பர் சுவாமிகள் கழித்ததற்கு இரங்குவார்.

அவ்வாறு இரங்கிய நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லப் புகுகிறார் அபிராமிபட்டர்.

‘கழிந்ததற்காக இழவு பட்டாற்போல வருந்துகிற நெஞ்சமே, நீ வருந்தாதே!’ என்கிறார்,

இழவுற்று நின்ற நெஞ்சே!

இரங்கேல். -

மனம் வருந்துவதற்குக் காரணம், ஏதாவது வாழ்க் கையில் குறை நேர்வது. பணத்தால் குறை உள்ளவர்கள் நமக்குப் பொருள் கிடைக்கவில்லையே என்று ஏங்குவார் கள். ஆனல், வேண்டியபோது பணம் தரத் தந்தையோ, நண்பனே இருந்தால் ஏங்க வேண்டியதில்லையே! அறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/176&oldid=680555" இலிருந்து மீள்விக்கப்பட்டது