பக்கம்:சரணம் சரணம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை? 167

வின்மையினலே குறை உண்டானல் அப்போது வருந்த

நியாயம் உண்டு. ஆனல் நமக்கு வேண்டிய அறிவை எளிதில் வழங்கும் குருநாதன் இருந்தால் வருந்தவேண் டாம். நோய் வந்தால், மருத்துவர் துனே இருந்தால் வருந்த வேண்டாம்.

தமக்குத் துணேயாகக் குறைவிலா நிறைவாகிய அன்னையைப் பெற்ற அபிராமிபட்டருக்கு வருந்துவ தற்குக் காரணமே இல்லே. இதையே தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்வதுபோலச் சொல்கிறார், நம்முடைய அன்னையாகிய அபிராமி வேண்டியவற்றை எல்லாம் தர நமக்கு விழுத்துணேயாக இருக்கும்போது, நமக்கு என்ன குறை இருக்கிறது? ஏன் வீணே வருந்துகிறாய் நெஞ்சே? வருந்தாதே!’ என்று தைரியம் சொல்கிரு.ர்.

இழவுற்று நின்ற நெஞ்சே!

இரங்கேல்; உனக்கு என் குறையே?

அபிராமி நமக்குத் துனேயாக இருக்கிருள்’ என்று சொல்ல வருகிறார்; அன்னேயை வருணிக்கத் தொடங்கு கிறார்,

எம்பிராட்டியின் அழகை வருணிக்க வார்த்தைகள் இல்லே. அந்தப் பேரழகைச் சங்கராசார்ய சுவர்மிகள் செளந்தர்ய லஹரியில் பலபடியாகச் சொல்கிறார்; அந்த அழகு அலேயிலே தோய்ந்து தம்மை மறந்து குழந்தை யாகிறார், அபிராமி பட்டர் தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்கிறார்; நம்முடைய அன்னே எவ்வளவு அழகானவள்! இந்த உலகத்திலாகட்டும், வேறு உலகிலாகட்டும், அவளுக்கு ஒப்பான அழகுடையவர் வேறு யார் இருக் கிறார்கள்? அந்த அழகைப் பார்த்துக்கொண்டே இருந் தாலே பசி தீருமே; வினை தீருமே! எப்போது நினைத் தாலும் அந்த வெள்ளம் பூரணமாக நம் அகக்கண் முன் வந்து நிற்குமே! அவள் இருக்கும்போது உனக்கு என்ன ஆகுறை வந்தது? அந்தப் பூரணமான அழகு வெள்ளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/177&oldid=680556" இலிருந்து மீள்விக்கப்பட்டது