பக்கம்:சரணம் சரணம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை? 171

பனிமாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளேக்

கொம்பு இருக்க... நெஞ்சே, உன்க்கு என் குறையே? - அம்பிகை தன் தலையின்மேல் பிறையைச் சூடியிருப் பதை, ஒளிர்மதிச் செஞ்சடையாளே?? (84) என்று பின்னே ஒரு பாட்டில் கூறுவார். லலிதா சகசிரநாமத்தில் 243-ஆவது திருநாமமாக அமைந்திருப்பது, சாருசந்த்ர கலாதரா என்பது. அம்பிகை அணிந்த பிறை என்றும் தேயாமலும் வளராமலும் ஒரே நிலேயில் அழகாக இருக் கிறது. அதல்ை சாருசந்த்ரன் (அழகிய திங்கள்) என்று அத்திருநாமத்தில் வருகிறது. ஆசிரிய மாலே என்னும் பழைய தமிழ் நூல், “இமயக் கிழவி, தனிக்கண் விளங்கும் துதற்பிறை மேலோர், மிகைப்பிறை கதுப்பிற் சூடி’ என்று பாராட்டும். சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரியில், 4.சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக், குவளே உண்கண் பவளவாள் முகத்தி’ (28:1-2) என்று வருகிறது. தருண வாள் நிலா வீசு சடில மோலி மாகாளி: (107) என்பது தக்கயாகப்பரணி. - -

அம்பிகை மென்மையான வடிவுடையவள். அதனல் கோமளயாமளேக் கொம்பு என்றார். கோமளமாகிய, யாமளேயாகிய பூங்கொம்பு போன்றவள் என்பது பொருள், சகோமளாகாரா’, ‘கோமளாங்கி (லலிதா சகசிர நாமம் 437, 721) என்பன அம்பிகையின் திருநாமங்கள்.

அம்பிகைக்கு சியாமளா என்பது ஒரு திருநாமம். அதுவே யாமளே என்று தமிழில் வந்தது. யாமளாகமத் தால் போற்றப் பெறுபவளாதலால் யாமளா என்பதே அவள் திருநாமம் என்றும் கொள்ளலாம். “யாமளேக் கோமளமே” (33)என்று இவ்விரண்டையும் சேர்த்து முன்பு ஒரு பாட்டில் சொன்னர்.

முன்பு வல்லி என்று தொடங்கி இப்போது கொம்பு என்றார். வல்லியென்றது திருமேனி, ஒசித்து நெடியதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/181&oldid=680561" இலிருந்து மீள்விக்கப்பட்டது