பக்கம்:சரணம் சரணம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன குறை? 173

(கழிந்ததற்கு வருந்தி நின்ற என் நெஞ்சமே, தன் திரு மேனி அழகுக்கு வேறு ஒருவரும் ஒப்பே இல்லாத கொடி போன்ற அபிராமி, அரிய வேதங்களிலே பயிலுவதல்ை சிவந்த திருவடித் தாமரைகளே உடையவள்; குளிர்ச்சியை யுடைய அழகிய பிறையைச் சூடும் திருமுடியை உடைய மெல்லியலாகிய யாமளே யென்னும் பூங்கொம்பு நமக்கு வேண்டியவற்றையெல்லாம் அருளிக் காப்பாற்ற இருக்கும் போது, நீ வருந்தாதே; உனக்கு என்ன குறை இருக்கிறது?

அழகு-ரூப செளந்தர்யம், குண செளந்தர்யம் இரண் டையும் கொள்ளலாம். வல்லி-கொடி போன்றவள்; அபி ராம வல்லி, கோமள வல்லி, மரகத வல்லி என்று அடை யடுத்தும் அடையடுக்காமல் தனியேயும் வருவதுண்டு, அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லி என்றது, அபிராம வல்லி என்ற திருநாமத்தை நினேந்துச் சொன்னதாகவும் கொள்ளலாம்.

அறிதற்கு அரியனவாதலின் அருமறைகள் என்றார், வெளிப்படையாகத் தெரியாத பல இரகசியங்களைத் தன் னிடத்திலே கொண்டிருப்பதல்ை மறையென்னும் பெயர் பெற்றது. -

பனிமா மதி-குளிர்ச்சியும் பெருமையும் உடைய மதி. பனி என்பதற்கு நடுக்கம் என்றபொருளும் உண்டு. தட்சன் சாபத்தால் நடுக்கத்தை அடைந்த மதி என்றும் ஒரு பொருள் சொல்லலாம். மதியின் குழவி-மதிக் குழவி; பிறைச்சந்திரன்; இன்: வேண்டாவழிச் சாரியை,

திருமுடி-அழகிய முடி, மங்கலமான முடி. அழகும் மங்கலமும் இழந்த மதிக்கு இடம் தந்து அதற்கு அழகும் மங்களமும் அருளியதாதலின் திருமுடி ஆயிற்று.

இழவு-இழந்ததனால் உண்டானவருத்தம்; ஆகுபெயர். நின்ற-ஒரு செயலும் செய்யமாட்டாமல் நின்ற, உனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/183&oldid=680563" இலிருந்து மீள்விக்கப்பட்டது