பக்கம்:சரணம் சரணம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் குறை?

மனிதன் குறைபாடுடையவன். அவனுடைய ஆற்றல் நிறைவுடையதன்று; சிறிய ஆற்றல் உடையவன். அவனு அடைய அறிவும் கிற்றறிவு. அவன் ஆயுளோ சில ஆண்டு களே. சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவுடையவன்” அவன், அவனிடம் உள்ள செல்வமும் அருட்செல்வத்தை நோக்கும்போது சிறியது. இப்படி எல்லா வகையாலும் குறை உடையவன் மனிதன்.

அவனிடத்தில் உள்ள குற்றங்களுக்கும் அளவில்லை. அந்தக் குற்றங்கள் நாளாக ஆக அதிகமாகின்றன. மனிதன் வாழ்வு நீள நீள அவனிடம் குற்றங்கள் வளர் கின்றன; குணங்கள் தேய்கின்றன.

குறை என்பதற்கு, ஒன்று இல்லாக் குறை என்றும் குணமில்லாக் குறையாகிய குற்றம் என்றும் இருவேறு பொருள் உண்டு. முதலில் உள்ள குறைக்கு மறுதலே நிறைவு; மற்றாெரு குறைக்கு எதிரானது குணம், மனிதன் நிறைவு இல்லாதவன்; குணம் நிரம்பாதவன்.

இதற்கு நேர்மாருக இருப்பது பரப்பிரம்மத்தின் இயல்பு. அம்பிகையே பரப்பிரம்மம்; பரதேவதை. அவன் குறைவே இல்லாத நிறைவுடையவள். ‘குறைவிலா நிறைவ்ே கோதிலா அமுதே’ (திருவாசகம்) என்பது அம்பிகைக்கும் பொருந்தும். நிறைவுடையவள் என்பதற்கு பூர்ணு, புஷ்டி (லலிதா. 292, 444) என்ற அம்பிகையின் திருநாமங்களே சான்றாகும். அவள் என்றும் .பூர்ணமாக இருப்பவள். அதிலிருந்து எதை எடுத்தாலும் அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/185&oldid=680565" இலிருந்து மீள்விக்கப்பட்டது