பக்கம்:சரணம் சரணம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் குறை? 177:

அரிது, அம்பிகையோ எவ்வளவு பெரிய குறைகளையும் நீக்கும் கருனேயும் ஆற்றலும் உடையவள். *

அப்படியே குற்றங்களைப் போக்குகிறவளும் அவள் தான். மனிதர்களின் குற்றங்களே ஆறு வகையாகத் தொகுத்து உரைப்பார்கள். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவை அவை. அவற்றால் மனிதன் மேலும் மேலும் பிறவிக்கு ஆளாகிருன். அந்தக் குற்றங்களினின்றும் நீங்கி இன்புற வேண்டுமானல் அம்பிகையின் அருளேப் பெற வேண்டும்.

குறைகள் நீங்கி நிறைவு பெறுவதற்கும், குற்றங்கள் நீங்கிக் குணம் பெறுவதற்கும் பரிபூர்னேயும் குண நிதி யுமாகிய அம்பிகையின் அருள் வேண்டும். அப்போதுதான் குறைவிலா நிறைவும் கவலேயில்லாத அமைதியும் உண்டாகும். - . . தேனக்குவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலே மாற்றல் அரிது?? r * :

என்பது திருக்குறள் மனக்கவல் அடியோடு மாற்றும் ஆற்றல் கடவுளுக்குத்தான் உண்டு. ‘.

இந்த உண்மையை அம்பிகையின் பக்தர்கள் அறிவார் கள். தங்களிடம் ஏதேனும் இல்லாத குறையோ, குற்றமோ இருந்தால் அவற்றைப் போக்கிக்கொள்ள உலகிலுள்ள மக்களே நாடமாட்டார்கள்; அம்பிகை ஒருத்தியையே சரணுகப் புகுவார்கள்.

அபிராமிபட்டர் இந்தக் கருத்தைச் சொல்ல வரு கிறார். தாயே, நான் குறை உள்ளவன் என்பதை நன்றாக உணர்கிறேன். அந்தக் குறை போனல்தான் பிறவி என்னும் பிணிபோய் உன்னுடைய திருவருளால் ஆனந்தப் பிராப்தி உண்டாகும். எந்த விதமான குறைபாடு ன்னக்கு இருந்தாலும் அதை யாரிடம் சென்று நான் முயையிடு: வேன்? என்குறையையும் குற்றத்தையும் போக்கும் ஆற்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/187&oldid=680567" இலிருந்து மீள்விக்கப்பட்டது