பக்கம்:சரணம் சரணம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சரணம் சரணம்

உடையவள் நீ. உன்னேயே நம்பியிருக்கும் என் குறை யைத் தீர்ப்பது உனக்குக் கடமையும் ஆகும். ஆகவே நான் உன் திருவடியையே வாழ்த்துகிறேன்; துதிக்கிறேன்; உன்னே வழிபடும் நிலயினின்றும் பிறழாமல், வேறு யாரையும் புகல் என்று எண்ணுமல், ஒரே நிலையாக நின்று. எத்துகின்றேன்? என்று தொடங்குகிறார்

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன்.

எல்லாம் அம்பிகையின் பொறுப்பு என்று நம்பி அவளேச் சரணம் அடைந்தவர்களுக்கு அவள் அருள் செய் -கிருள்; அவர்களுடைய துயரங்களை நீக்குகிருள், அதல்ை அன்னேக்குத் துக்க ஹந்த்ரி(194) என்ற திருநாமம் அமைந் கிருக்கிறது. குற்றங்களைப் போக்குகிறவளாதலின் தோஷ வர்ஜிதா (185) என்ற திருப்பெயரைக் கொண்டிருக்கிருள். பாவங்களேயெல்லாம் போக்குபவளாதலின், பாபநாசினி, பாபாரண்ய தவாநலா (167, 743) என்று லலிதா சகசிர நாமம் அன்னையைப் புகழ்கிறது. மகாபாதகமாக இருந் தாலும் போக்கும் மகாபாதக நாசினி (214) அவள். மோக நாசினி (163), விக்ன நாசினி (451) என்ற திருநாமங் களும் குற்றங்களையும் குறைகளையும் போக்குகிறவள் என்பதை வலியுறுத்தம். பந்த மோசினி (346) ஆதலின் பந்த பாசக் கட்டறுக்கிருள், பிறவிப் பெருநோயையே மாற்றும் பெருங்கருணைப் பிராட்டி அன்ன; ஆதலால் அன்றாே பவாரண்ய குடாரிகா (144), பவநாசினி (175), பவரோகக்னி (842) என்ற திருநாமங்கள் அம்பிகைக்கு அமைந்தன!

இவற்றையெல்லாம் நன்கு அறிந்த அபிராமிபட்டர் அபிராமியை அணுகிச் சொல்கிறார்.

என் குறை தீர நின்று ஏத்துகின்றேன்.

குறையென்பது ஒன்று இல்லாத குறையையும் குற்றத் தையும் குறிக்கும் என்று முன்னே பார்த்தோம். இரண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/188&oldid=680568" இலிருந்து மீள்விக்கப்பட்டது