பக்கம்:சரணம் சரணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவம் புரிந்தவர்களின் அடையாளங்கள் 9.

அடைவார்கள் என்று சொன்னர். ஒருகால் முத்தி கிடைக்கா விட்டாலும் அவர்கள் மறுபடியும் பிறந்தால் சக்கரவர்த்திகளாகப் பிற்ப்பார்கள் என்கிறார் இந்தப் பாட்டில், - . -

இறைவியைத் துதித்து வணங்கிப் புகல் புகுந்தவர்கள். தீவிரமான பக்குவம் உடையவர்களாக இருந்தால் அவர் களுக்கு இப்பிறவி தீர்ந்த பிறகு இனிப் பிறவி இல்லாத, முத்திநிலை கிடைக்கும். பக்குவத்தில் ஏதேனும் சிறிது குறை இருந்தால் மறுபடியும் பிறக்க வேண்டி நேரும். அப்படிப் பிறவி நேர்ந்தாலும் அந்தப் பிறவி இன்ப வாழ்வை அநுபவிக்கும் பிறவியாகவே அமையுமாம். %

எம்பெருமாட்டி பரமேசுவரனுடய பத்தினியாக விளங்குகிருள். காமேசுவரனுடன் ஒன்றிய காமேசுவரி, யாக நிற்கிருள். பிறை முடித்த ஐயணுகிய பரமசிவ. ஆணுடைய மனே மங்கலமாக, அவனுடைய எற்றத்துக்கும் தோற்றத்துக்கும் காரணமாக விளங்குகிருள்.

- பிறை முடித்த ஐயன் திருமனேயாள். + -

அவளுடைய பாரதாரவிந்தங்களில் அன்பு செய்கிற் அடியார்கள். பணிவும் அகந்தையற்ற அடக்கமும் உடை யவர்களாதலால் தாம் அம்பிகையை வணங்குவதாகச் சொல்லாமல் அம்பிகையின் அடியை வணங்குவதாகச் சொல்வார்கள். நான் என்னுமல் அடியேன் என்பார்கள்: இறைவியின் திருவடியையே சிந்தித்து வந்திப்பவர்கள் அவர்கள். அவர்கள் பிறவி பிறகு எடுத்தால் மன்னர் மன்னராகப் பிறப்பார்கள். முன்னைப் பிறவியில் அவ்வாறு அன்புசெய்து அதுவே தவமாக ஒழுகினவர்கள் இப் பிறவியில் மன்னராக இயங்குகிறார்கள். . .

பிறை முடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு.

. அன்பு முன்பு. செய்யும் தவமுடையார் ச-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/19&oldid=680570" இலிருந்து மீள்விக்கப்பட்டது