பக்கம்:சரணம் சரணம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சரணம் சரணம்

(விரிந்த உயர்ந்த வானத்திலுள்ள மின்னலுக்குக் குற்றத்தை உண்டாக்கி, அதனினும் மெலிந்திருக்கின்ற துட்பமான இடையையுடைய மென்மையான தாயே)

நேர் இடை-நுணுகிய இடை. அம்பிகை மென்மை யானவள்; கோமளா காரா, கோமளாங்கி (437, 721). என்பன அவளுடைய மென்மையைச் சுட்டும் திருநா மங்கள்,

மறுபடியும் பட்டருக்கு, அம்பிகைக்குக் குறை ஒன்று: உண்டென்று சொல்லிவிட்டோமே!’ என்ற எண்ணம் வருகிறது. அதை மாற்ற எண்ணுகிறார், தாயே, நீ நிறை: வுடையவள். எங்களைப் போன்ற சிறியவர்களுடைய குறை: களேப் போக்கி நிறைவு தருவாய் என்பது உனக்கு ஒரு பெருமையா? பரிபூரணனுகிய பரமேசுவரன்கூட நின் அன்பு பெருவிட்டால் குறையுடைய வகிைருன். சிறிது நீ: அவனைப் புறக்கணித்தாலும் அவனுக்கு வருத்தம் உண் டாகிறது. நீ ஊடல் கொள்ளும் காலத்தில் அது கண்டு. அவன் மிகவும் குறைப்படுகிருன்; அந்தக் குறையைப். போக்குவதற்கு வழி என்ன என்று ஆராய்கிருன்; உன் திருவடிகளில் வீழ்கிருன்; தன்னுடைய சடைமுடியின் மேல் நின் திருவடித் தாமரைகளே வைத்துக் கொள்கிருன். அந்தத் திருவடித் தாமரை அவனுடைய குறையையே பேrக்கும் என்றல், என் குறை எம்மாத்திரம்? ஆகவே, அந்தத் தாமரைகளையே புகலடைந்து என் குறை தீர நின்று அவற்றை ஏத்துகிறேன்’ என்கிறார்.

தன் குறை தீர எம்கோன்

சடைமேல் வைத்த தாமரையே.

அம்பிகை ஊடல் கொள்ளும் காலத்தில் பரமசிவன் அவனைப் பணிவதைப் பிற பக்தர்களும் கவிஞர்களும் சொல்லியிருக்கிறர்கள். இந்த ஆசிரியர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/192&oldid=680573" இலிருந்து மீள்விக்கப்பட்டது