பக்கம்:சரணம் சரணம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார் குறை? 188:

‘வானந்த மான வடிவுடை

யாள்மறை நான்கினுக்கும்

தான் அந்த மான

சரணுரவிந்தம் தவளநிறக்

கானம்தம் ஆடரங் காம்எம்

பிரான் முடிக் கண் ணியதே92 (11)

“திங்கள் பகவின் மனம்நாறும் சீறடி : (35)

‘பணிமா மலர்ப் பாதம் வைக்க........

கொன்றை வார்சடையோன் மேலினும்: (60. என்று முன்னும் இதை வெளிப்படையாகவும் குறிப்பாக வும் சொன்னர்,

தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்கு? என்று (98) பின்னும் சொல்லுவார்.

இங்கே, ஊடலைப் போக்கச் சிவபெருமான் அம்பிகை. யின் திருவடியை வணங்குவான் என்று வெளிப்படையாகச் சொல்லாமல், எேம் கோளுகிய சிவபெருமானுக்குக் குறையே இல்லே. எப்போதேனும் குறை நேர்ந்தால் அவன் தன் சடைமேல் ஒரு தாமரையைச் குடிக்கொள் வான். அந்தத் தாமரையை நான் ஏத்துகிறேன்’ என்று. நயமாகச் சொல்கிரு.ர்.

சிவபரம்பொருளே தன் குறை தீரும்படி உன் திருவடி களைத் தொழுது நிறைவு பெறுகிருன். நான் நிறைவு. பெறுவதற்கு என்ன சந்தேகம்?’ என்ற கருத்து இதில் அமைந்திருக்கிறது.

என்குறை தீரநின்று ஏத்துகின் றேன்;இனி யான்பிறக்கின் நின்குறையே அன்றி யார்குறை

காண்? இரு நீள்விசும்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/193&oldid=680574" இலிருந்து மீள்விக்கப்பட்டது