பக்கம்:சரணம் சரணம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சரண்ம் சரணம்

மின்குறை காட்டி மெலிகின்ற

நேரிடை மெல்லியலாய்! தன்குறை தீரனம் கோன்சடை மேல்வைத்த தாமரையே.

(அகன்ற உயர்ந்த வானத்தில் உள்ள மின்னலுக்கு ஒரு குறையைக் காட்டி அதனினும் மெலிவு பெறுகின்ற, நுட்பமான இடையையுடைய மெல்லியலே! எம்முடைய பிரானகிய சிவபெருமான் தன்னுடைய குறை தீரும் பொருட்டுத் தன் சடை முடியின்மேல் வைத்த நின் திரு வடித்தாமரைகளே அடியேனுடைய குறை தீரும்பொருட்டு தளராமல் நின்று துதித்து வழிபடுகிறேன் (அதல்ை நான் இனிப் பிறக்கமாட்டேன்). ஒருகால் அடியேன் இனிமேல் .பிறந்தால், அதற்குக் காரணம் நீ என்னேப் புறக்கணிக்கும் குறையே யன்றி வேறு யார் குறை?

பிறக்கின் என்பது பிறக்கமாட்டேன் என்ற குறிப்பை உடையது. செயின் என்னும் வாய்பாட்டு வினை யெச்சம் அருமையைச் சுட்டி நிற்கும் என்பதைத் திருக் குறளில் பரிமேலழகர் பல இடங்களில் தெரிவிக்கிரு.ர். காண்: அசை. இரு விசும்பு, நீள் விசும்பு. இங்கே நீளம் உயரத்தைச் சுட்டியது. குறை காட்டுவதாவது, இது மெல்லியதன்று என்று கூறும்படி உள்ள குறையை உண் டாக்குதல். நேர்தல்-நுட்பமாக இருத்தல். மெல்லியல் என்பது விளியேற்று மெல்லியலாய் என்று நின்றது. எம் என்றது பிற அடியார்களேயும் உளப்படுத்தி, சிவபெரு மானுடைய குறை, அம்பிகையின் ஊடல் தீரவில்லேயே என்பது. அவள் அன்பைப் பெருத குறை அது. சடைமேல் வுைத்த என்றது, குறிப்பால் இறைவன் சடைமுடி தேவி r தாளில் பட வணங்குதலேப் புலப்படுத்தியது. தாமரை என்றது ஆகுபெயர்; திருவடிகளைக் குறித்தது. தாமரையே ஏத்துகின்றேன் என்று முடியும்.) -

அம்பிகையை வழிபடுகிறவர்களுக்குப் பிற்வித்துன்பம் இல்லே என்பது கருத்து.

அபிராமி அந்தாதியில் 72-ஆவது பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/194&oldid=680575" இலிருந்து மீள்விக்கப்பட்டது