பக்கம்:சரணம் சரணம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் எழுதிய உருவம் 187

மூர்த்தி உயிர் பெற்று ஜோதி வடிவாகத் தோன்றும். பச்சையாக இருக்கும் அப்பளம் சுவையாக இராது. அதை எண்ணெயில் இட்டுப் பொரித்தால், நல்ல வெண்ணிறம் பெற்று உண்னும் பக்குவமும் சுவையும் பெற்றுவிடு கிறது. அவ்வாறு நம்முடைய உபாசன மூர்த்தியைப் பல காலும் தரிசித்து உள்ளே தியானித்தால் நம்முடைய அன் பெனும் எண்ணெயில்ை அந்தத் திருவுருவம் இன்பந்தரும் ஒளியுடன் விளங்கும்.

அடியார்கள் இறைவனுடைய அங்க லாவண்யத்தை அடிக்கடி சொல்வதும் நினைப்பதும் மனத்தில் தியானம் கைகூடி வருவதற்காகத்தான். அருளாளர்களின் பாடல் களைப் படிக்கும்போது அவற்றில் வரும் வருணனைகளில் ஈடுபட்டு உள்ளத்தே அவற்றை எழுதிப் பார்த்தால் மனம் மெல்ல மெல்ல ஒருமை நிலையை அடையும்,

‘மெளனத்தை உற்று நின்னே உணர்ந்துஉணர்ந்து எல்லாம் ஒருங்கிய

நிர்க்குணம்பூண்டு என்னே மறந்திருந்தேன்; இறந் தேவிட்டது

இவ்வுடம்பே??

என்பது அருணகிரிநாதர் திருவாக்கு. சகுண உபாசன யிலிருந்து நிர்க்குண அநுபவம் வர மனம் ஒருமுகப்பட வேண்டும்.

அபிராமிபட்டர். இந்தத் தியானம் கைவந்தவர்; அம்பிகையைப் புறக்கண்ணுல் தரிசிப்பதோடு நில்லாமல் அவள் அங்க நலன்களே உள்ளேயும் தரிசிப்பவர்; பல காலும் வாக்கில்ை சொல்லிச் சொல்லி, அவ்வாறு சொல்லும் போதெல்லாம் உள்ளே எண்ணி எண்ணி, அம்பிகையின் திருவுருவத்தை உள்ளத்தே எழுதி எழுதி இன்புறுகிறவர்.

இதோ வருகிறது அம்பிகையின் திருவுருவத்தை நினைப்பூட்டிக்கொள்ளும் பாடல்: திமிறிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/197&oldid=680578" இலிருந்து மீள்விக்கப்பட்டது