பக்கம்:சரணம் சரணம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சரணம் சரணம்

போகும் மனத்தைத் தடுத்து நிறுத்தும் கடிவாளம் போலப் பயன்படுபவை இத்தகைய பாடல்கள்.

இப்போது அம்பிகையின் திருவுருவத்தைச் சொல் லால் எழுதுகிறர். அதைப் படிக்கும்போது நாமும் நம் உள்ளத்தில் எழுதிக் கொண்டு பார்க்க வேண்டும்.

அம்பிகை வீற்றிருக்கிருள். அவள் அழகிய கடம்ப மலர் மாலேயை அணிந்திருக்கிருள். அது பளிச்சென்று கண்ணில் படுகிறது. அவள் கதம்பவனத்தில் வசிக்கிறவள்; கதம்பமலரைக் குழலில் அணிகிறவள்; செவியிலே செரு கிக் கொள்கிறவள்; கடம்ப மாலையையே மார்பில் அணிந்து செம்மாந்து வீற்றிருக்கிறவள்.

தாமம் கடம்பு.

திருமார்பைப் பார்த்த பிறகு சற்றே தம் பார்வை யைப் பக்கவாட்டில் திருப்புகிறார் அபிராமிபட்டர். அவள் திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் ஐந்து மலர்களாகிய பஞ்ச பாணத்தைக் காட்டுகிறார். பலமுறை அவர் அவற் றைப் , பற்றிச் சொல்லியிருக்கிறார். சொன்னல் என்ன? இன்னும் நாம் கண்ணே மூடிக்கொண்டால் அந்த வடிவம் தோன்றவில்லேயே! இருட்டுத்தானே தெரிகிறது? எத்தனே தடவை சொன்னலும் நிற்கவில்லையே! அதற்காக விட்டு விடலாமா? திருப்பித் திருப்பிச் சொல்கிறார், இதோ ஆயுதங்கள்’ என்கிறார், -

படை பஞ்ச பாணமும்,

அம்பைச் சொன்னல் வில்லேயும் சொல்ல வேண்டியது தானே? வில் இல்லாமல் அம்பு உண்டா? இதோ அம்பிகை யின் திருக்கரத்தில் உள்ள கரும்பாகிய தனுவைக் காட்டு கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/198&oldid=680579" இலிருந்து மீள்விக்கப்பட்டது