பக்கம்:சரணம் சரணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I) சரணம் சரன்ம்

என்பதை எப்படி அறியலாம்? சில அடையாளங்களால் தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்குச் சில சின்னங்கள் உண்டு. அந்த அடையாளங்கள் இன்னவை என்றுசொல். கிறார், அபிராமிபட்டர். அவர்கள் அரசர்களாக வாழ். வார்கள். ஆதலால் அரசர்களுக்குரிய சின்னங்களே, அத். தகைய தவமுடையோர்களின் அடையாளங்கள் என்று

சொல்கிறார்.

அவர்கள் ஏழைகளைப் போலத் தாம் போக வேண்டிய இடங்களுக்கு நடந்து போகமாட்டார்கள்; தேரில் போவார்கள்; குதிரையில் போவார்கள்; ஆனேயில் போவார்கள். அவர்கள் தலையில் முடி விளங்கும். முடி யுடை மன்னர்களாக இருப்பார்கள்; சிவிகையில் ஊர்வலம் வருவார்கள்.

அவர்களுடைய உதவியை நாடிப் பலர் அவர்களிடம் வருவார்கள். பல மன்னர்கள் கையுறைகளோடு வரு வார்கள். திறையாகப் பொன்னேக் கொணர்ந்து பெய்வார்கள். “:

அவர்கள் சிங்காசனத்தில் விற்றிருக்கும்போது அவர் களுடைய மார்பில் பொன்ரைம் மின்னும்; முத்துமாலை ஒளிவிடும்.

ரத கஜ துரக பதாதிகள் என்னும் சதுரங்க சேனையும் அவர்களுடைய எவலேச் செய்யும். படைப்பலத்தோடு, வாழ்வார்கள். அதல்ை மற்ற மன்னர்கள் அவர்களைக் கண்டு அஞ்சி வலியவந்து சரணடைந்து கனகத்தைத். திறையாகப் பெய்வார்கள்.

இது அரசர்களுக்குரிய நிலை அல்லவா? மகாராஜ்ஞ யாக இருக்கும் எம்பெருமாட்டியின் அருள் கிடைத்தால் இந்த நிலை வருவது ஒரு பெரிதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/20&oldid=680581" இலிருந்து மீள்விக்கப்பட்டது