பக்கம்:சரணம் சரணம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14}0 சரணம் சரணம்

அடியைத் தரிசித்து மறுபடியும் கண்ணே மேலே உயர்த்துகிறர். அம்பிகையின் நான்கு திருக்கரங்கள் தெரி கின்றன.

செங்கைகள் நான்கு.

மாலையையும், பஞ்சபாணங்களையும், வில்லையும், திரு. வடிகளையும், திருக்கரங்களேயும் கண்ட பிறகு ஒட்டு, மொத்தமாக அந்தச் சமுதாய சோபை எப்படி இருக் கிறது? முதல் பாட்டிலேயே, உதிக்கின்ற செங்கதிர்? என்று தொடங்கினவர் அல்லவா? ஒரே செஞ்சோதிப் பிழம்பாக அம்பிகை ஒளிர்கிருள்.

ஒளிசெம்மை.

இப்போது அம்பிகையின் திருநாமத்தை நினைக்கிரு.ர். திரிபுரசுந்தரியாகிய அவளுக்குத் திரிபுரை என்பதும் ஒரு பெயர். மூன்று மூன்றாக உள்ள பொருள்களெல்லாம். அவளாக இருக்கிருள்.

நாமம் திரிபுரை. மூன்று என்றதைக் குறிக்கும் இந்தத் திருநாமத்தைச் சொன்னவுடன் இந்தப் பக்தருக்கு அம்பிகையின் திருமுக மண்டலத்திலுள்ள மூன்று திருவிழிகள் நினவுக்கு வரு கின்றன. கதிரவனயும், சந்திரனேயும், அக்கினியையும் மூன்று விழிகளாகக் கொண்டவள் அபிராமி, கண் மூன்றும் கருத்தில் வைத்து’’ (53) என்று அம்பிகையின் மூன்று கண்களே முன்பும் சொன்னர், இப்போது,

ஒன்றாேடு இரண்டு நயனங்களே என்கிறார், நெற்றிக் கண்ணுகிய ஞானக்கண் தனிச் சிறப்பு உடையது. எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்களே உண்டு. சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் யாருக்கும் இல்லாத தனிச்சிறப்பாக நெற்றியிலே கண் இருக்கிறது. அந்தச் சிறப்பை நோக்கி அதைத் தனியே வைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/200&oldid=680582" இலிருந்து மீள்விக்கப்பட்டது