பக்கம்:சரணம் சரணம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் இயல்பு

ஆம்பிகையின் பக்தர்கள் எந்த விதமான மோகன் களிலும் ஆசை வைக்கமாட்டார்கள். இறைவியின் உபாசனையிலே இன்பம் காணும் அவர்களுக்கு இந்த உன் கத்திலுள்ள இன்பங்கள் சுவை தராமல் போவது ஆச்சரியம் அன்று. அவர்களுக்குச் சுவர்க்காதி போகங் களும் மதிப்புடையன அல்ல. ‘இந்திர லோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே? என்பது ஆழ்வார் திருவாக்கு.

அன்பர்களுடைய குறிக்கோள் அம்பிகையின் பாதார விந்தங்களே. அவர்கள் பெற நினைக்கும் பயன் அந்தத் திருவடிகளை அடைவதே. இறைவியின் அடியே மோட்ச ரூபமானது, சாட்சாத் மோட்சமே அது, மோட்சம் அடைந்தார் என்பதும், இறைவியின் திருவடியை அடைந் தார் என்பதும் ஒரே பொருளுடையவை. .

திருமுருகாற்றுப்படையில், ‘சேவடி படரும் செம்மல் உள்ளமொடு (62) என்றதற்கு உரை எழுதுகையில் நச்சிர்ைக்கினியர், திருவடியே வீடாக இருக்கும்’ என்றார், அது, தென்னன் பெருந்துறையான், காட்டா தனவெல் லாம் காட்டிச் சிவம்.காட்டித், தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி’ என்பதலுைம் பிறரும் திருவடியைக் கூறுமாற்றாலும் உணர்க என்று எழுதுகிறார்.

அபிராம வல்லலியின் அடியிணையையே தம்முடைய பெரும்பயனுகக் கொண்டவர்கள் அடியார்கள்; அடியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/202&oldid=680584" இலிருந்து மீள்விக்கப்பட்டது