பக்கம்:சரணம் சரணம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் இயல்பு 1

மூவகை மலரும் பூத்து

வண்டுளே முழங்கத் தெய்வப் பூஅலர் கொடிடேர்ந் தன்ன

பொன்னஞர் கூத்தும் அன்னர் நாஅலர் அமுதம் அன்ன

பாடலும் நாக நாட்டுக் காவலன் கண்டு கேட்டுக்

களிமதுக் கடலின் ஆழ்ந்தான்.”

(இந்திரன் பழிதீர்த்த படலம்,2, 3)

இவ்வாறு இன்புற்று வாழும் இந்திர பதவியையும் அம்பிகையின் அ டி ய | ர்க ள் விரும்பமாட்டர்களாம், சிவபெருமான் முதலியவர்கள் போற்றும் பெருமாட்டி யாகிய அம்பிகையின் சரணுரவிந்தங்களேயே லட்சியமாகக் கொண்டவர்கள் இந்திர பதவியை விரும்பிப் பெறு: வார்களா?

பாவையர் ஆடவும் பாடவும் பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில்

தங்குவரே? எல்லாவற்றுக்கும் மேலான பதவியைப் பெற இருப்ப வர்கள் தாழ்ந்த பதவியாகிய இந்திரபோகத்தை விரும்ப மாட்டார்கள் என்ற கருத்தையே இப்படிச் சொல்கிருச் ஆசிரியர், : 6

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும் அயனும் பரவும் அபிராம

வல்லி அடியிணையைப் பயன்என்று கொண்டவர், பாவையர்

ஆடவும் பாடவும்பொன் சயனம் பொருந்து தமனியக்

காவினில் தங்குவரே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/207&oldid=680589" இலிருந்து மீள்விக்கப்பட்டது