பக்கம்:சரணம் சரணம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - சரணம் சானம்

(மூன்று திருவிழிகளையுடைய சிவபிரானும், வேதங் களும், திருமாலும். பிரமதேவனும் புகழ்ந்து பாராட்டும் அபிராமவல்லியின் இரண்டு திருவடிகளையே முக்தியாகிய பயனென்று கொண்டு வழிபட்டுத் தியானிக்கும் அடிய வர்கள், அரம்பை மகளிர் நடனம் புரியவும், இன்னிசைப் பாடல்களைப் பாடவும் அவற்றைக் கண்டும் கேட்டும் இன்புற்று, பொன்னிறம் பெற்ற படுக்கையில் அவர் களோடு பொருந்தி இன்புறுவதற்கு இடமாகிய கற்பகச் சோலேயிலே இந்திரராகி விற்றிருப்பார்களா?

பரவுதல்-புகழ்தல்; துதித்தல். பரவும் அபிராமவல்வி என்றும், பரவும் அடியினே என்றும் இரண்டு விதமாகவும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். பயன்-எல்லாவற்றினும் மேலாம் பயனகிய முக்தி. கொண்டவர்-லட்சியமாகக் கொண்டு தியானிக்கும் அடியார், பாவையர்-அரம்பை முதலிய தேவலோகத்து அணங்குகள். பொன் சயனம்பொன்லைாகிய படுக்கை. தமனியக் கா-பொன்னிறம் பெற்ற கற்பக மரங்கள் அடர்ந்த பூஞ்சோலே, தங்குவரேதங்குவார்களா, ஏ. வின. இந்திர பதவியைப் பெற்று இருப்பார்களா என்றபடி

தங்குவரே என்பதை உடம்பாடாக்கி, ஏயை அசை யாக்குவதும் ஒருவாறு பொருந்தும், தேவியின் திருவடி யையே பயனுகக் கொண்டவர் எளிதில் இந்திரபதவியைப் பெறுவர் என்று அதற்குக் கருத்து உரைக்க வேண்டும்.)

இது அபிராமி அந்தாதியில் 74-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/208&oldid=680590" இலிருந்து மீள்விக்கப்பட்டது