பக்கம்:சரணம் சரணம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கமும் முக்தியும்

அம்பிகையின் திருவடிப் பேற்றையே முடிவான பயனுக எண்ணி வழிபடுகின்றவர்கள் இந்திர பதவியை யும் விரும்பார் என்று சொன்ன அபிராமிபட்டர், அத்த கைய லட்சியம் இல்லாமல், அம்பிகையின் திருக்கோலத் தைத் தரிசித்தும் தியானித்தும் வழிபடுகிறவர்கள் பெறும் பயனை அடுத்தபடி சொல்கிறார். -

ஒரு பள்ளிக்கூடத்தில் புகுந்தவன் பள்ளியிறுதி வகுப் பில் தேர்ச்சி பெற்று மேலே கல்லூரிக்குப் போகவேண் டும் என்று எண்ணிப் பயிலப் புகுகிருன். இடையிலே, நீ இதோடு படிப்பை நிறுத்திவிடு; உனக்கு நல்ல வேலே தருகிறேன்’ என்று யாராவது சொன்குல் அவன் அதை விரும்பமாட்டான். கல்லூரியில் படித்துப் பட்டம் வாங்கு வதே அவ னு ைடய முடி வா ன நோக்கம். அந்த லட்சியம் கைகூடும் வரை அவன் தளர்ச்சி இல்லாமல் படிப்பான்.

வேறு ஒருவன், எதுவரைக்கும் படிக்கப் போகிருேம் என்ற நோக்கமே இல்லாமல் படிக்கிருன். ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாகத் தேர்ச்சி பெறுகிருன். பள்ளி இறுதி வகுப்பிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிறன். பிறகு அவனுக்கு வேலே கிடைக்கிறது. அவனைப் படிக்க வைத்த வர்கள் அவனுடைய அறிவாற்றலே உணர்ந்து, இவனே மேலும் படிக்க வைத்தால் கல்லூரியிலும் நன்றாகப் பயின்று பட்டம் பெற்றுச் சிறப்படைவானே’ என்று: எண்ணுகிறார்கள், சில மாதங்கள் வேலே பார்த்தவனே மறு :படியும் கல்லூரியில் படிக்க வைத்துப் பட்டம் பெறச் செய்கிறார்கள். அவன் பட்டப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிருன்.

அம்பிகையின் திருவடிப்பேற்றையே பரம லட்சிய மாகக் கொண்டவர்கள் முதலில் சொன்னவனைப் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/209&oldid=680591" இலிருந்து மீள்விக்கப்பட்டது