பக்கம்:சரணம் சரணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவம் புரிந்தவர்களின் அடையாளங்கள் I 1

அம்பிகையின் அடி பணியும் தவத்தை முற்பிறவியிற் செய்தவர்களுக்கு இப்பிறவியில் உண்டாகும் சின்னங்களே அடுக்கி அபிராமி பட்டர் சொல்கிறார், .

வையம் துகரம் மதகரி

மாமகு டம்சிவிககை பெய்யும் கனகம் பெருவிலே

ஆரம் பிறைமுடித்த ஐயன் திருமனே யாள் அடித்

தாமரைக்கு அன்புமுன்பு செய்யும் தவம்உடை யார்க்குள வாகிய சின்னங்களே,

(தேர், குதிரை, மதம் மிக்க களிறு, பெரிய முடி, பல்லக்கு, பிற மன்னர்கள் கப்பம் கட்டும் பொன், மிக்க விலையையுடைய பொன்ரைம், முத்துமாலே என்பன, பிறையைத் திருமுடிக்கண் சூடிய சிவபெருமானுடைய அழகு மிக்க பத்தினியாகிய அபிராமியின் திருவடித் தாமரைக்கு முற்பிறவிகளில் அன்பு செய்த தவமுடைய அடியார்களுக்கு உண்டாகிய அடையாளங்களாம்.

வையம்-தேர். துரகம்-குதிரை. காலானேயும் கூட்டிக் கொள்க. சதுரங்க சேனேயையும் உடையவர்களாவார்கள் என்றபடி. சிவிகை பல்லக்கு. பெய்யும் கனகம்-தம்மிடம் வந்தவர்களுக்குக் கொடையாக வழங்கும் பொன் என்றும் சொல்லலாம். ஆரம்-மாலே. முன்பு - முற்பிறவிகளில், சின்னங்கள் - அடையாளங்கள்.)

இந்த அடையாளங்களை உடையவர்கள் மன்னர்கள். ஆகவே மன்னர்களாகப் பிறப்பார்கள் என்பது கருத்து. மறுமையில் வீடு பெறுவதோடன்றி இம்மையில் வள வாழ்வு பெறும் நிலேயும் அம்பிகையின் அடியார்களுக்குக் கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/21&oldid=680592" இலிருந்து மீள்விக்கப்பட்டது