பக்கம்:சரணம் சரணம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சரணம் சரணம்.

வர்கள். அவர்கள் இடையில் இந்திர பதவி முதலிய எந்தப் பதவியையும் விரும்பாமல் பரமுக்தியை அடைவார்கள்.

வேறு ஒரு சாரார் இருக்கிறார்கள். அவர்கள் அம்பி கையை வணங்கிளுல் நல்வாழ்வு வாழலாம் என்று: எண்ணுகிறவர்கள். அவர்கள் தங்கள் விருப்பம் நன்கு நிறைவேறப் பெறுவார்கள். இம்மையில் நன்றாக வாழ்வது என்ன வியப்பு? மறுமையில் சொர்க்கலோக பதவி அடை வார்கள் இந்திர போகத்தை நுகர்வார்கள்; இந்திரனு: டைய பதவியையே அடைவார்கள்.

நூறு யாகம் செய்தால் இந்திர பதவியை அடைய லாம். அதல்ை இந்திரனுக்குச் சதமகன் என்ற பெயர் உண்டு. அம்பிகையின் வழிபாடு பல யாகங்களைச் செய்தி. பயனே உண்டாக்கும். ஆகவே அம்பிகையை வழிபட்டவர் கள் இந்திர பதவியைப் பெறுவார்கள்.

அம்பிகையின் திருவுருவத்தைத் தரிசித்துத் தியானித்து வழிபட்டவர்கள் முக்தியைத் தம்முடைய லட்சியமாகக் கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு அது இறுதியில் நிச்சயமாகக் கிடைக்கும். முதலில் அவர்கள் விரும்பிய சுகவாழ்வும், சொர்க்கவாழ்வும் கிடைக்கும்; பிறகு பிற வாத நிலையும் உண்டாகும்.

ஒரு குழந்தை, இனிய சுவையுள்ள உணவை உண்ணு. கிறது. அந்த உணவின் சுவையிலே அது இனிமை காண் கிறது. அதை விரும்பி உண்ணுகிறது. அந்த உணவு. உடம்புக்கு வளம் தருவதாதலால், வெறும் சுவை தருவ தோடு நில்லாமல் அந்தக் குழந்தைக்கு உடல் நலத்தை, யும் தருகிறது. குழந்தைக்குச் சுவை ஒன்றே தெரிந்திருந்: தாலும், உண்ட உணவின் சாரம் அதற்கு உடல் வளர்ச்சி யையும் தருகிறது. அவ்வாறே அம்பிகையின் திருமேனி யைத் தியானித்தவர்கள் சொர்க்கபோக வாழ்வை அடை வதோடு நிற்கமாட்டார்கள்; மோட்ச இன்பத்தையும் அடைவார்கள்; இனிப் பிறவாத பரமானந்தப் பிராப்தி யைப் பெறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/210&oldid=680593" இலிருந்து மீள்விக்கப்பட்டது