பக்கம்:சரணம் சரணம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசார்க்கமும் முக்தியும் 20 !

இந்தக் கருத்தை அபிராமிபட்டர் சொல்கிரு.ர். ‘அம்பிகையின் திருமேனியைக் குறித்தவர் கற்பக நிழலில் வாழும் வாழ்வைப் பெறுவர்; பிறவி இல்லாத முக்தி நிைைய அடைவர்’ என்று சொல்ல வருகிரு.ர்.

அம்பிகை எல்லாப் பிரபஞ்சங்களேயும் படைக் கிறவன், ஸ்ர்வலோக ஜனனி அவள். புவனங்களைப் படைத்து யாவருக்கும் பிறப்பைத் தரும் அம்பிகையே தன் இன அண்டினவர்களைப் பிறவாத நிலையை அடையச் செய்கிருள் என்று சுவைப்படக் கூறுகிறார் ஆசிரியர்.

அம்பிகை எவ்வுலகத்துக்கும் தாய். அவள் திருவுந்தி அயில் மலே, கடல், சதுர்த்தச புவனங்கள் யாவும் தோன்று கின்றன , அவள் எல்லாவற்றையும் படைத்தாள் என்ப பதையே இவ்வாறு சொல்கிறார், தாய் ஆகையால் எல்லா வற்றையும் ஈன்ற திருவுந்தியை உடையாள் என்கிறார் . பெரிய அலேகள் பொங்குகின்ற உப்புக் கடல் முதலிய கடல்களையும் ஈரேழ் புவனங்களையும் பூத்த உந்தியை உடையவள் அம்பிகை.

பொங்குஉவர் ஆழியும் ஈரேழ்

புவனமும் பூத்த உந்தி. :பூத்தவ ளேபுவ னம்பதி குன்கையும்’ (18) என்று முன்பு பாடியவர் இவர். அகில லோகம் ஈரேழும், உதர சோபி தாநாபி கமல வாயி ல்ைமீள உமிழும் நீலி’’ (110) என்பது தக்கயாகப் பரணி.

எம்பெருமாட்டியின் கூந்தல் இயற்கையான நறு மணத்தை உடையது. அதோடு மலரையும் அணிந்து கொண்டிருக்கிருள். மலரை அணிவது மங்கலத்தின் அறி குறி, நித்திய சுமங்கலியாகிய அம்பிகை என்றும் மலர் சூடிய குழலே உடையவள். மட்டுவார் குழலம்மை, ஞானப் பூங்கோதை, சுரும்பார் குழலி, வண்டுவார் குழலி, தேனர் குழலி என்று வெவ்வேறு தலங்களில் உள்ள அம்பிகையின் .திருநாமங்கள் இந்த உண்மையைத் தெளிவுபடுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/211&oldid=680594" இலிருந்து மீள்விக்கப்பட்டது