பக்கம்:சரணம் சரணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சரணம் சரணம்:

இவ்வளவையும் தியானித்தவர் கடைசியில் அபிராமி, யின் திருக்கண்களே எண்ணுகிறார். அம்பிகைக்கும் மூன்று: கண்கள் உண்டு. த்ரிநயன, த்ரிலோசன, த்ரயம் பகr என்று அப்பெருமாட்டிக்கு உள்ள திருநாமங்கள் இதனைப் புலப்படுத்தும். -

கண் மூன்றும்.

இவ்வாசிரியரே, “ஒன்றாே டிரண்டு நயனங்களேச்சி (73), முக்கண்ணியை’’ (101) என்று பின்னே கூறுவர். ‘சூரிய சந்திர அக்கினிகளேயே மூன்று கண்களாகக் கொண் டிருக்கிருள் அன்னே. அவள் கண்ணேத் திறந்தால்தான் நாம் கண்ணில்ை பார்க்க முடியும். சூரியனே சந்திரகுே. அக்கினிச் சுடரோ இல்லாவிடின் கண் இருந்தும் பொருன் களைக் காண முடியாது. இருட்டில் கண் உள்ளவனும் குருடனும் ஒரே நிலையில் இருப்பார்கள். ஆகவே நாம் கண்ணைத் திறந்து பார்த்தால் போதாது. அம்பிகை, கண்ணேத் திறந்தால்தான் நம்முடைய கண்கள் திறப்பத. :ளுல் பயன் அடையலாம். - .

அம்பிகையின் திருவுருவத்தைக் கோயில்களிலும் படங்களிலும் காண்கிருேம். அவற்றைக் கண்ணுலே தரி சித்து அந்த அளவிலே நின்றுவிடக் கூடாது. அவள் வடி வத்தை உள்ளத்திலே வைத்துத் தியானிக்க வேண்டும். புறத்தே காண்பதை உள்ளத்தே காண்பதற்க்ாகத்தான் மூர்த்திகளை அலங்கரித்து வைக்கிரு.ர்கள். அப்படி உள்னே காணும்போதுதான் விக்கிர ஆராதனைக்குப் பலன் உண்டாகும். - • , .

‘முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்?? என்பார் திருமூலர். அப்படி ஆராதிக்கப்படுபவள் அம்.

‘பிகை என்பதை, ‘அந்தர்முக சமாராத்யர்-என்ற் திரு தாமம் சொல்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/26&oldid=680602" இலிருந்து மீள்விக்கப்பட்டது