பக்கம்:சரணம் சரணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய தவம் 17

உயிரா வணம்இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி’ என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். உள்ளம் என்னும் கிழியிலே தியானிக்கும் மூர்த்தியை எழுத வேண்டுமாம். மூச்சுக்கூட விடாமல் இருந்து உற்று நோக்கி அதை எழுத வேண்டுமாம்.

அம்பிகையின் வழிபாட்டைப் பலருடன் சேர்ந்து நடத்தலாம். அபிஷேக ஆராதனைகளையும் பலரும் கூடித் தரிசிக்கலாம். அவள் புகழைப் பலரும் ஒருங்கு கூடிப் பாட லாம். அர்ச்சனைகூடப் பலர் சேர்ந்து பண்ணலாபி, ஒரே சமயத்தில் பலர் சேர்ந்து அர்ச்சனை செய்யும் முறையை லட்சார்ச்ச&ன, கோடி அர்ச்சனே என்ற அர்ச்சனே வகை நிகழும்போது பார்க்கிருேம். வெளி முகத்தில் நடப்பவை இவை. உள் முகத்தில் செய்யும் தியானம் இத்தகையது அன்று. அவனவன் தனித்தனியே அமர்ந்து கண்மூடித். தியானிக்க வேண்டும்.

உணவுப் பொருளைப் பயிர் செய்யும்போது பலர் கூடி உழைக்கிறார்கள், உழுவது முதல் அறுவடை வரையில் பலர் சேர்ந்து சேர்ந்து செயலாற்றுகிறார்கள். அறுவடை யான தானியம் அரிசியாகுமட்டும் அப்படியே பலர் வெவ்வேறு வேலைகளில் ஒன்றாக ஈடுபடுவார்கள். அரிசியை உணவாகச் சமைக்கும்போதும் பலர் கூடிச் சமைக்கிறர் கள். பெருங்கூட்டத்துக்குப் பரிமாறும் போதும் பலர் அந்த வேலேயைச் செய்கிறார்கள். பலரும் ஒன்றாக உட் கார்ந்து சாப்பிடுகிறர்கள், ஆல்ை பலரும் சேர்ந்து ஒருவருக்காகச் சாப்பிட முடியாது. அவனவன் தனித் தனியே உணவை உண்ண வேண்டும். நாற்பதுபேருக்குரிய உணவுக்காக ஒரு பானையிலே அரிசியைப் போட்டு, வடிப்பதுபோல நாற்பது பேருக்குரிய சாப்பாட்டை ஒரு வயிற்றுக்குள்ளே போட முடியாது. அவன் அவன் தனித் தனியே தன் வாயில் உணவையிட்டு.விழுங்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/27&oldid=680603" இலிருந்து மீள்விக்கப்பட்டது