பக்கம்:சரணம் சரணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வறுமையைப் போக்கும் வழி

இந்த உலகத்தில் றன்றக வாழவேண்டும்; இதை மறந்துவிட்டுச் செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்: என்று சொல்வதில் என்ன பயன்?’ என்று கேட்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். இம்மை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆல்ை இறைவனிடமும் இறைவியிடமும் பக்தி பூண்ட வர்கள் இம்மையில் துன்பம் உறுகிறவர்கள் என்ற பைத்: தியக்கார எண்ணம் ஒன்று பலரிடம் நிலவி வருகிறது. மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்று திருஞான சம்பந்தர் சொல்கிறார். ‘இம்மையே தரும் சோறும். கூறையும்’ என்பது சுந்தரர் வாக்கு.

பக்தியுடையவர்கள் சோம்பேறிகளாக, முயற்சியில் லாதவர்களாக, இருப்பார்கள் என்று யார் சொன் ஞர்கள்? மெய்ஞ்ஞானியாகிய ஜனகர் ஒரு நாட்டுக்கு அரசராக இருந்து வாழ்ந்து வந்தார். நாயன்மார்களில் சிலர் அரசர் களாகவே இருந்திருக்கின்றனர். இறைவன் திருவருளால் அவர்கள் வள வாழ்வு பெற்று வாழ்ந்தார்கள்.

பலர். எல்லாவற்றுக்கும். விதி காரணம்; ஆகையால் நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை’ என்று போலி வேதாந்தம் பேசுகிறார்கள், விதி என்பது முன் பிறவிகளில் செய்த செயல்களின் விளைவாக அமைவது. செயல் வேறு;. அதல்ை விளையும் இன்பதுன்பமாகிய அநுபவம் வேறு. சென்ற பிறவிகளில் செய்த செய்கைகளுக்குரிய விளைவாகிய இன்ப துன்பங்களே இப்போது அதுபவிக்கிருேம். சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/30&oldid=680607" இலிருந்து மீள்விக்கப்பட்டது