பக்கம்:சரணம் சரணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சரணம் சரணம்

ருக்கு வராது, என்று சொல்கிறார். இனி அவர் கூறும் பாட்டைப் பார்க்கலாம்,

நோன் இல்லாதவன் என்று சொல்லி ஒருவரிடம் சென்று நிற்பதே இழிவு. அப்போது உடம்பெல்லாம் கூனிக் குறுகிப்போகிறது. நெடியோன் என்றும் நெடுமால் என்றும் பெயர் பெற்ற நீண்ட வடிவினகிைய திருமாலே, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்ணே யாசிக்கச் சென்றபோது கூனிக்குறுகி வாமனனுகச் சென்று நின்றான். எவ்வளவு பெரியவனைலும் ஒருவனிடம் ஒன்றை யாசிக்க வேண்டுமானல் கூனிக் குறுக வேண்டியிருக்கும் என்ற உண்மையை அது காட்டுகிறது. அவ்வாறு இழிவுபட்டு,

நில்லாமல் இருப்பதை மனமார விரும்புபவர்களைப் பார்த்துத் சொல்கிறார் அபிராமிபட்டர்,

இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால் சென்று இழிவுபட்டு - நில்லாமை நெஞ்சில் நினகுவிரேல்

இவ்வாறு தொடங்குகிறர். இரப்பது இழிவு என்று அதை மனமார வெறுக்கும் மக்களுக்குத்தான். இந்த உபதேசம். நெஞ்சில்ை துன்புற்று, நான் ஏழை என்று வாயில்ை சொல்லி, உடம்பு குறுகி நின்று இரப்பதளுல் மூன்று கரணங்களும் இழிவான நிலையை அடைகின்றன.

ஆகவே அதை ‘இழிவுபட்டு நிற்கும் செயலாகச் சொல்கிறார்,

நான் கண்ட வழி இது என்று மேலே சொல்ல வருகிறார், அவர் சில பேரிடம் சென்று பழகுவார்; வழி படுவார். சில பேர் இருக்கும் திக்கு நோக்கியே செல்ல மாட்டார். தவம் செய்பவர்களிடம் அடிக்கடி போவார். தவம் செய்யாதவர்களிடம் போகமாட்டார். தவம் செய்யாதவர்களில் இரண்டு வகையினர் உண்டு. குழ்நிலை துணை செய்யாமையாலும் வழிகாட்டுவார் இன்மையாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/34&oldid=680611" இலிருந்து மீள்விக்கப்பட்டது