பக்கம்:சரணம் சரணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாருக்குப் பயன்?

அம்பிகையின் பாதத்தைத் தியானித்தால் இந்த உலகத்தில் வள வாழ்வு கிடைக்கும் என்று சொன்னவர், அவளேத் தியானிக்கும் வழியைச் சொல்ல வருகிரு.ர். அவளுடைய திருமேனியைப்பற்றிச் சொல்லுகிறார். அம்பி கையின் திருவுரு, சோதிமயமானது. அதற்கு உவமையாக எதைச் சொல்வது? கண்ணேப் பறிக்கும் தேசுடைய அப் பெருமாட்டியை, நிலையாகவே ஒரு மின்னல்கொடி தோன்றினுல் எப்படி இருக்கும், அப்படி இருப்பாள் என்று சொல்லலாமா? மலர்க்கமலே துதிக்கின்ற மின்கொடி’ என்று முதல் பாட்டில் சொன்னர். லலிதா சகசிரநாமத் தில் வரும் தடில்லதா ஸ்மருசி (107) என்ற திருநாமமும் அவள் மின்னற்கொடி போன்றவள் என்றே சொல்கிறது. இவ்வாசிரியருக்கு அவ்வாறு சொல்வதில் திருப்தி உண் டாகவில்லே, மின்னலேப்போன்று கண்ணேப் பறிக்கும் சோதி அன்னேயின் திருமேனிச் சோதி என்பது ஓரளவு தான் பொருந்தும். ஆசிரியர் யோசித்தார்; மின்னுக் கொடி போன்றவள் என்று சொல்வது ஒரு வகையிற். பொருத்தமென்று தோன்றுகிறது. ஒரு வகையில் போதா தென்று தோன்றுகிறது. ஆகவே பல மின்னற்கொடிகளைப் போன்றவள் என்று சொல்லலாம் என்று எண்ணினர்.

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவாகி

விளங்குகின்ற அன்ள்ை. ஆயிரம் மின்னல்கள் ஒரு திருமேனியின் உருவெடுத்து விளங்குவதுபோன்ற கோலத்தை உடையவள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/38&oldid=680615" இலிருந்து மீள்விக்கப்பட்டது