பக்கம்:சரணம் சரணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36) சரணம் சரணம்

அம்பிகை ஆனந்தமயமானவள்; தன் ஆனந்தக்கொடி மகிழ்ச்சி பெருக’ என்பது திருவிளையாடற் புராணம் பரமானந்தா (252) என்பது அம்பிகையின் திருநாமங் களில் ஒன்று. “பழவடியார் உள்ளத் தடத்தில் ஊற். றெடுத்துப் பெருகு பரமானந்த வெள்ளப் பெருக்கே’’ (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்தப் பருவம்) என்பர் குமரகுருபரர்.

எம்பெருமாட்டியை விக்கிரக வடிவில் கண்டு, அவள் தேசுடைய திருமேனியுடையவள் என்று மனத்தே பாவித்துத் தியானம் செய்தால் அப்போது மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்கும் திருவுருவத்தை உள்ளே தரிசிக்கலாம். அப்பால் ஒரே சோதி வெள்ளமாக எங்கும் பரந்து நிற்க, ஆனந்தமே தன்வடிவாக நிற்பாள் அம்பிகை. இந்த ஆனந்தம் இன்னவாறு இருப்ப்து என்று சொல்லால் உணர்த்துவதற்கரியது; ‘சொல்லொணு திந்த ஆனந் தமே (கந்தர் அலங்காரம்). ஆலுைம் உண்முகத்தே அநுபவித்தற்குரியது, அம்பிகையின் திருவருள் மிகுதி ஆக ஆக, மெல்ல மெல்ல இத்தகைய இன்ப நுகர்ச்சி கை கூடும். இந்த அநுபவத்தில் திளைத்தவர் அபிராமிபட்டர்.

ஆகவே, . . -.

மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி

விளங்குகின்ற

அன்ள்ை; அகம் மகிழ் ஆனந்தவல்லி என்று பாடுகிறார். . - .

இப்படி உள்ள அம்பிகை அநாதியானவள். அவர் ளுடைய தத்துவத்தை நமக்கெல்லாம் அறிவிப்பது வேதம். வேதத்தைத் தந்தவளும் அவள். வேத உருவாய் விளங்கு கிறவளும் அவள். வேதத்தின் முதலில் உள்ள பிரணவமே அவள் வடிவம். வேதத்தின் இடையில் எங்கும் பரவி யிருக்கும் சாகைகளும் அவளே. வேதத்தின் இறுதியாகிய உபநிஷதமாக இருப்பவளும் அப்பிராட்டியே. இந்த உண்மையை அபிராமி அந்தாதியின் இரண்டாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/40&oldid=680618" இலிருந்து மீள்விக்கப்பட்டது