பக்கம்:சரணம் சரணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாருக்குப் பயன்? 31

பாட்டில் பார்த்தோம். சுருதிகளின் பணையும் கொழுந் தும் பதிகொண்ட வேறாம்’ என்று அங்கே சொன்னர். அதையே வேறு வகையில் இங்கே சொல்கிறார்,

அருமறைக்கு

முன்னுய் நடு எங்குமாய் முடிவாய முதல்விதன்னே.

(அறிவதற்கரிதாக நுட்பமாக இருக்கும் வேதத்துக்கு முதலான பிரணவமாய், நடுவிலே எங்குமாகப் பரவியிருக் கும் சாகைகளாய், முடிவாக உள்ள உபநிடதங்களாய் இருக்கும் முதற்பொருளாகிய அபிராமியை.)

முதலில் பக்தர்களின் அநுபவப் பொருளாக இருக்கும். தன்மையைச் சொல்லிப் பிறகு அவள் அநாதியான வேத வடிவாக இருப்பவள் என்று கூறினர். முதலில் உள்ள நில அநுபூதிமான்கள் அநுபவிக்கும் வியஷ்டி நிலே, பின்னது வேதவிற்பன்னர்கள் அறிந்து பாராட்டும் சமஷ்டி நிலை. முன்னது நுட்பமானது; பின்னது சற்றே திட்பமானது முன்னது ஒளி வடிவு; பின்னது ஒலிவடிவு. எல்லா ஒளி களுக்கும் மேலான ஒளிவடிவு அம்பிகையின் வடிவம்; எல்லா ஒலிகளுக்கும் மேலான வேதவடிவம் அம்பிகையின் வடிவமே.

இத்தகைய பெருமாட்டியை நாம் தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்யாவிட்டால் என்ன?’ என்று யாரோ கேட்கிறார்கள். “தியானம் பண்ணுவிட்டால் அவளுக்கு ஒரு நஷ்டமும் இல்லே’ என்று சொல்ல வரு கிறார் ஆசிரியர்.

உலகில் தம்முடைய குறைகளே நிறைவேற்றிக் கொள் வதற்காகக் காம்யார்த்த பூஜை செய்கிறவர்களில் சிலர், *நான் இவ்வளவு செய்தும் கடவுள் எனக்கு நன்ம்ைசெய்ய வில்லையே! என்று அங்கலாய்ப்பார்கள். லஞ்சம் கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/41&oldid=680619" இலிருந்து மீள்விக்கப்பட்டது