பக்கம்:சரணம் சரணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சரணம் சரணம்

அன்பர்களுடைய உள்ளத்தில் சில காலம் இருந்து விட்டுப் போகிறவள் அல்ல அவள். என்றும் அங்கே. உறைகிருள். வெயிலில் அலைந்தவர்கள் நிழலேக் கண்டால் விட்டுப் போகாதவாறு போல என்றும் நீங்காமல் அந்த உள்ளத்தில் நிற்கிருள். இதைத் தம்முடைய அநுபவத். தாள் உணர்ந்தவர் இவ்வாசிரியர். அன்னே ஒன்றாய் அரும்பிப் பலவாக விரிந்து உலகெங்குமாய் நிற்பதும், அனைத்தையும் நீங்கி நிற்பதும் அவர் கற்றும் கேட்டும் அறிந்தவை. ஆல்ை பக்தர் நெஞ்சினுள் நிற்பதைத் தம். முடைய அநுபவத்திலே நுகர்ந்தவர். ஆகையால் தாமே சான்றாக நின்று பகர்கிரு.ர். x

என்றன் நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்றவா! என்கிறார். இத்தகைய பரதேவதை ஒன்றுக்கும் பற்றாத: கடையேனாகிய அடியேனுடைய நெஞ்சிலே ஒரு கணமும் நீங்காமல் நிலை நின்று, அப்படியே நிற்றலே விரும்புவது என்ன ஆச்சரியம்!’ என்று வியப்படைகிறார். புரிகின்றவா என்பது புரிகின்றவாறு என்ன வியப்பு என்ற பொரு, ளுடையது. புரிதல்-விரும்புதல்.

புரிதல் என்பதற்குச் செய்தல் என்றும் பொருள் உண்டு. என் உள்ளத்திலே மறையாமல் நின்று அவள் திருவிளையாடல் பல புரிகின்றவாறு என்ன வியப்பு: என்றும் பொருள் கொள்ளலாம். அம்பிகை உள்ளத். தடத்திலே நின்று தன் அருளொளியை வீசப் புகுந்து விட்டால் அப்போது அந்தப் பக்தனிடத்தில் நிகழும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. எல்லா வகையான சித்தி களும் அவனுக்குக் கிடைக்கும். பிறர் அறியாத ஆனந்தப் பெருங்கடலில் அவன் மூழ்கி இன்புறுவான். இவை யாவும் இறைவியின் கருணேத் திருவிளையாடல்கள்.

“இப்படியும் இருக்குமா?’ என்று நாம் ஐயப்படு கிருேம். ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கும் குமாஸ்தா ஒருவர் ஒரு வீட்டில் வாழ்கிறர். அவருக்கு அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/48&oldid=680626" இலிருந்து மீள்விக்கப்பட்டது