பக்கம்:சரணம் சரணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னேயின் எளிமை 44

ஒன்றாய் அரும்பிப் பலவாய்

விரிந்திவ் வுலகெங்குமாய் நின்றாள்; அனைத்தையும் நீங்கிநிற்

பாள்; என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்ற

வா!இப் பொருள் அறிவார் அன்றால் இலையில் துயின்றபெம்

மானும்என் ஐயனுமே. (ஒரு பொருளாகிய பராசக்தியாய் துட்பமான துபாருளாக மணம் முதலியன பரவாமல் அடக்கிக் கொண்டிருக்கும் அரும்புபோல இருந்து, பிறகு உலகத் தைப் படைத்தல் முதலிய பல வேறு திருவிளையாடல்களே இயற்றும் பொருட்டுப் பல்வேறு சக்திகளாக விரிந்து, இந்த உலகம் எங்கும் அந்தர்யாமியாய் நின்றன்; ஆயினும் எல்லாவற்றையும் கடந்தும் நிற்பாள்; அத்தகைய அம்பிகை, ஒன்றுக்கும் பற்றாத எளியேனுடைய புல்லிய நெஞ்சுக்குள்ளே, ஒரு கணமும் மறையாமல் நிலத்து நின்று விரும்பிப், பல திருவிளையாடல்களேப் புரிகின்றவாறு என்ன ஆச்சரியம்! இந்த உண்மையை அறிபவர்கள், பிரளயகாலமாகிய அன்று ஆல் இலேயில் யோகத்துயில் கொண்ட பெருமானகிய திருமாலும் என் தந்தையாகிய சிவபெருமானுமே ஆவர். - -

அரும்பி என்பதற்குப் புதிதாகத் தோன்றி என்று பொருள் கொள்ளாமல், தன்சக்திகளையெல்லாம் அடக்கிக் கொண்டு அரும்புபோலத் தோற்றம் தந்து என்று கொள்ள வேண்டும். பொன்றாது-மறையாமல். புரிகின்ற வா-புரிகின்றவாறு என்ன வியப்பு: புரிதல்-விரும்புதல்; செய்தல். பொருள்-உண்மை; கருத்தென்றும் கூறலாம். அன்று: பண்டறி சுட்டு; பிரளய காலத்தைச் சுட்டியது. அம்பிகையை அன்னேயாக வழிபடுகிறவரதாலின் சிவ பெருமானேத் தந்தையாகச் சொன்னர். ஐயன்-தந்தை.) அம்பிகை பக்தர்களுக்கு மிகவும் எளிமையுடையவள் என்பது இந்தப் பாட்டின் கருத்து. -

இது அபிராமி அந்தாதியின் ஐம்பத்தாருவது பாட்டு. - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/51&oldid=680630" இலிருந்து மீள்விக்கப்பட்டது