பக்கம்:சரணம் சரணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப்பெருஞ் செல்வி

ஒரு வீட்டில் உள்ள குடும்பத்தில் தாய், தந்தை, மக்கள், பிற உறவினர்கள் வாழ்கிறர்கள். இல்லற வாழ்க் கையை மேற்கொண்டவர்களுக்கு வீட்டில் உள்ளவர் களிடமும் அயலார்களிடமும் அன்பு இருக்க வேண்டும். அந்த அன்பு இருந்தால் அறம் செய்யும் இயல்பு உண்டா கும். அன்பு இல்லாவிட்டால் எதையும் எவருக்கும் கொடுக்க மனம் வராது. அதல்ை இல்வாழ்க்கையின் பண்பு அன்பு என்றும், அதல்ை விளேயும் அறம் பயனென் றும் வள்ளுவர் கூறுகிரு.ர்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’’

என்று கூறுவார். -

இவ்வாறு அமையும் இல்லத்திற்குத் தலைவி வீட்டின் அரசியாகிய மனேவியே. மனைவி என்னும் பெயரே’ மனேக்கு உரிமை உடையவள் என்ற பொருளே உடையது. அதற்கு ஆண்பால் பெயர் இல்லே. கணவனே மனேவன் என்று சொல்லும் வழக்கம் இல்லே. அப்படியே இல்லத் தின் தலைவியாகிய பெண்ணுக்கு இல்லாள் என்ற பெயர் வழங்குகிறது. கணவனுக்கு இல்லான் என்ற பெயர் இல்லை. அந்தச் சொல்லுக்கு வறியவன் என்றுதான் பொருள். ஆகவே, இல்லத்தின் தலேவி அந்த வீட்டில் உள்ள பெண் என்பது தெரியவரும்.

ஆண்மகன் பல முயற்சிகளே நாட்டிற் செய்துபொருள் ஈட்டுகிறவன்; பலரோடு சேர்ந்து தலேவகை நின்று பல செயல்களைச் செய்பவன். கணவன் என்பது கண்த்துக்குத் தலைவன் என்ற பொருளே உடையது. நாட்டிலுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/52&oldid=680631" இலிருந்து மீள்விக்கப்பட்டது