பக்கம்:சரணம் சரணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சரணம் சரணம்

இல்வாழ்வான் எந்தப் பொருளே வழங்கிலுைம், செக்கில் கையெழுத்துப் போடும் பிரபுவைப் போல. ஓர் உத்தரணி நீர் வீட்டுக்குடையவள் விட்டாலன்றி, அந்தத் தானம் செல்லாது. ஆகவே அறம் செய்வதற்குரியவள் இல்லத் தரசி என்பது தெளிவாகும்.

அவள் தன் கணவன் கொண்டு வந்து தரும் பொரு ளுக்குத் தக்கபடி வாழ்க்கையில் அறமும் இன்பமும் உண் டாகும்படி செய்ய வேண்டும். கணவன் குறைந்த அளவில் ஈட்டிக் கொண்டு வந்தால் அவள் நிறைந்த அளவில் நீட்டக்கூடாது. அத்னல் வாழ்க்கை அல்லற்படும். ஈட்டு வதற்கு ஏற்றபடி நீட்டுவது மனைவியின் கடமை. இதை யும் வள்ளுவர் சொல்கிறார்.

மனத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.?? -

‘இல்வாழ்வுக்கு ஏற்ற பண்புகளே உடையவளாகித் தன்ஆன மனேவியாக ஏற்றுக்கொண்ட கணவனுடைய பொருள் வருவாய்க்குத் தக்கபடி நடப்பவளே வாழ்க் கைக்கு ஏற்ற துணைவியாவாள்’ என்பது இதன் பொருள். தற்கொண்டான் வளம் என்பது கணவனுடைய வருவா யைக் குறிப்பது. அதற்கு ஏற்ப விருந்தோம்பல் முதலிய அறங்களே அவள் செய்ய வேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்வென்னும் பெருஞ்செயலை மேற்கொண்ட வனுக்கு உற்ற துணையாக அவள் இருக்க முடியும்

மற்றாென்று; இல்வாழ்வின் முக்கியமான பயனே அறம் செய்வதுதான்; இன்பம் பெறுதல் பரம்பரை அமல் இருப் பதற்காக அமைவது. முதுமை வந்த பிறகு இன்பம் நுகர்தல் முடியாத காரியம். ஆல்ை எப்போதுமே அறம் செய்யலாம். அதல்ைதான் தர்ம பத்தினி என்று மனேவியைக்குறிக்கும் வழக்கு வந்தது; காம பத்தினி என்று சொல்வதில்லை. தமிழிலும் இல்லக்கிழத்திதான் மனைவி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/54&oldid=680633" இலிருந்து மீள்விக்கப்பட்டது