பக்கம்:சரணம் சரணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப்பெருஞ் செல்வி 45

காமக் கிழத்தி என்பவள் அறவழிக்கு அப்பாற்பட்டவள்; இழித்தற்குரியவள், -

இதுவரையும் சொன்னவற்றால் வீட்டுக்குத் தலைவி பெண் என்றும், இல்லத்துக்கு உயிராக இருப்பவள் அவள் என்றும், அவள் தன் கணவனுடைய செல்வ நிலைக்கு ஏற்றபடி தர்மத்தைச் செய்ய வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளலாம். -

மனிதன் இப்படி வாழவேண்டும் என்று ஆண்டவனே நமக்குக் காட்டுகிருன். மனேவி மக்களோடு அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கையில் வாழவேண்டுமென்று அவனும் குடும்பத்தை உடையவனப்போல நடந்து காட்டுகிருன். அம்பிகையும் ஒரு குடும்பத்துக்குத் தலைவி எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்து சதாசிவ குடும்பினியாக விளங்குகிருள். அந்தக் குடும்பத்தின் தலைவி அம்பிகை; அவளுடைய வீடு சர்வப்பிரபஞ்சமும், ஆகவே பிரபஞ்சமாகிய விட்டுத் தலைவி எல்லா உயிர் களுக்கும் தாயாகிய அம்பிகையே. சிற்றறிவும் சிறிய ஆற்றலும் உடைய மனிதப் பெண்ணின் ஆட்சி எல்லே, வீட்டளவில் நிற்கிறது. அகிலலோக ஜனனியாகிய நித்திய சுமங்கலே அம்பிகை. அவள் ஆட்சி எல்லாப் பிரபஞ்சங் களேயும் தன்னுள் அடக்கிக்கொண்டது. எல்லாமே அவள் வீடுதான், ஆகவே அவளே ஜகதம்பிகை; உலகத் தலைவி; அகிலாண்டநாயகி.

அப்பெருமாட்டி, இல்லத்தரசி இப்படி நடக்க வேண்டும் என்று நடந்து காட்டினள். காஞ்சிபுரத்தில் ஒரு சிறப்பு உண்டு. மற்ற ஊர்களில் எல்லாத் திருக் கோயில்களிலும் அம்பிகையின் சந்நிதியில் அவள் நின்ற திருக்கோலத்தில் தோன்றுவாள். ஒவ்வொரு கோயி லிலும் சிவபிரான் சந்நிதியும் அம்பிகையின் சந்நிதியும் இருக்கும். காஞ்சிபுரத்தில் பல சிவாலயங்கள் உண்டு. ஒரு கோயிலிலும் அம்பிகை சந்நிதி. இல்லே. காமாட்சி ஆலயம் ஒன்றுதான் அம்பிகை திருக்கோயில். அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/55&oldid=680634" இலிருந்து மீள்விக்கப்பட்டது