பக்கம்:சரணம் சரணம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சரணம் சர்ண்ம்

யாருக்கோ சூட்டினேன் என்று அழுங்குகிறார். சென்றுஅம்பிகை இருக்கவும் இப்படிப் போகிருேமே என்று எண்ணி அவமானமுருமல் துணிந்து சென்று. பொய் என் றது, இல்லாத பல பண்புகளே. மெய் என்றது இருக்கும் ஓரிரு குணங்களே. இரண்டையும் சேர்த்துப் பாடி அதைக் கொண்டு சென்று அவரிடம் நாணமின்றி வாயாரப் பாடும்படி வைத்தாயே என்கிறர்.)

‘இப்படி அடியேன் செய்தேன்’ என்று சொல்லவில்லை. ‘இப்படி இயம்பும்படி நீதானே செய்தாய்?’ என்கிரு.ர். ‘நன்றே வரினும் தீதே புரிகினும் நானறிவ, தொன்றே யும் இல்லே’ என்ற உணர்வுடையராதலின் இப்படிச் சொன்னர். நீதானே என்னே ஆட்டுவிக்கிறாய்? நீ என்னே இவ்வாறு பிறரிடம் செல்லும்படி விடலாமா? உன் அருளே நிரம்பக் கொடுத்திருந்தால் பலரிடம் நான் போவேன? அப்படிப் போவதற்கு நீ எனக்குச் செய்த அருள் போதிய அளவு இல்லாமையே கரானம்’’ என்று உரிமையோடு சொல்கிறர். தாய் கொடுத்த சிற்றுண்டி போதாமல் வேறு ஏதோ கடையில் போய்க் கண்டதை வாங்கிச் சாப்பிட்ட குழந்தை, ‘நீ எனக்கு வேண்டிய அளவு கொடுக்கவில்லே. அதனல் அங்கே போகும்படி ஆயிற்று அதற்கு நீதானே காரணம்??? என்று கேட்பதுபோல இருக்கிறது இது.

பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய்; இதுவோ உன்றன் மெய் அருளே?

பொருள் சேர்ப்பார்க்கும் பேராசை உண்டு. அருளுக்கு ஏங்குவார்க்கும் பேராசை உண்டு. ஆளுல் பொருளுக்காக ஏங்குவதற்குத்தான் ஆசை என்று பெயர். அருளுக்கு ஏங்குவதற்கு ஆர்வம், அன்பு, முமுகூ;"த்வம் என்று பல வகையிற் பெயர் அமையும்.

அம்பிகை பேரருள் உடையவள் என்றும், அவளு :LJ அருளுக்குப் பாத்திரமாகிவிட்டால் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/60&oldid=680640" இலிருந்து மீள்விக்கப்பட்டது