பக்கம்:சரணம் சரணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலான புகலிடம் 37

அடுத்தபடி அம்பிகையின் திருமுக மண்டலத்தைக் தியானிக்கிறார். அதுவும் ஓர் அழகிய தாமரைதான். இரு கண்களாகிய தாமரைகளைக் கொண்ட பெரிய தாமரை அது; மலர்சியுற்ற அழகுத் தாமரை, தரஸ்மேரமுகாம் புஜா (924) என்று போற்றுகிறது சக சிரநாமம்.

வதனும்புயமும் பிறகு இந்த ஆசிரியரின் தியானத்துக்கு வருகின்றன

அம்பிகையின் திருக்கரங்கள். அவையும் தாமரைகளே கராம்புயங்கள். அப்பால் திருவடித் தாமரைகளில் வந்து திற்கிருச்.சரணும்புயந்தான் பக்தர்களின் மனம் அமைதி காணும் இடம்.

கராம்புயமும் சரணும்புயமும் என்று திருக்கரங்களையும் திருவடிகளையும் நினேக்கிரு.ர். தையல் நல்லாளுடைய நயனக் கருணும்புயத்தையும், வதரும்புயத்தையும், கராம்புயத்தையும், சரணும் புயத்தையும் எதற்காக நினைக்கிறார்?

உலகத்தில் எந்த எந்தப் பொருளையோ பற்றுக் கோடாகக் கொண்டு, அந்தப் பொருள் நிலயில்லாமல் அழிந்து போவதைக் கண்டு தவிக்கிருேம். உறுதியான இரும்பென்று ஒன்றைப் பற்றினுல் அது துருப்பிடித்துவிடு கிறது; ஒடிந்து போகிறது; அதிக வெப்பத்தால் உருகி விடுகிறது. மலேயைப் பற்றில்ை அது கல்லாக இருக்கிறது. அந்தக் கடுமை, பற்றிக்கொள்ளும் கைக்குத் துன்பத்தைக் கொடுக்கிறது. மனிதர்களைப் பற்றிக் கொண்டாலோ எல்லோரும் சுயநலக்காரர்களாக இருக்கிறார்கள். அவர் களுக்கே ஓர் அடைக்கலஸ்தானம் வேண்டியிருக்கிறது. அப்படியானல் நமக்குப் புகலிடம் ஒன்றும் இல்லேயா? தஞ்சமே கிடையாதா?

. என்றும் அழியாததும் நம்மிடம் கருணை உடையதும் அடைக்கலம் புகுவதற்கு எளியதாக இருப்பதும், நம்மைப்

- - . 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/67&oldid=680647" இலிருந்து மீள்விக்கப்பட்டது