பக்கம்:சரணம் சரணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சரணம் சரணம்

புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்ளும் மென்மையை உடை யதுமாக ஒரு பொருள் இருந்தால் அதைப் பற்றிக்கொள்ள லாம். ஆம், அந்தப் பரம்பொருளே அம்பிகை. அவளேத். தவிர நாம் தஞ்சம் என்று அடைவதற்கு வேறு புகலிடம் இல்லே. - -

குழந்தையைத் தந்தை அடித்தால் ‘அம்மா!’ என்று: அலறி ஓடும். அயலார் அடித்தாலும், அண்ணன், அக்காள் அடித்தாலும் அம்மா’ என்றே அழுது புகும். அம்மாவே. அடித்தால் வேறு ஒருவரைக் கூவி அழாமல், அம்மா!’ என்றே அழைதது அழும். தாயை வெறுத்துச் சென்ற துரோகியாலுைம் தடுக்கி விழுந்தால். ‘அம்மா’ என்று: தான் சொல்லுவான். இவற்றால், அன்னேயே புகலிடம் என்று தெளிவாகும். உடம்பைத் தந்த அன்னேக்கே இவ், வளவு சிறப்பு இருக்குமானுல் ஜகஜ்ஜனணியாகிய பராம்பி கைக்கு எவவளவு சிறப்பு இருக்கவேண்டும்! அவளே யாவ ருக்கும் மேலான புகலிடம். ஆதலால், அப்பெருமாட் டியை அல்லாமல் வேறு புகலிடம் இல்லே; என்னுடைய அநுபவத்தில் நான் வேறு கண்டதில்லே’ என்கிறார் அபிராமிபட்டர். அம்பிகையை நேரே சொல்லாமல் எம். பெருமாட்டியின் நயனம்புயமும் வதகும்புயமும் கராம் புயமும் சரணும்புயமும் அல்லாமல் வேறு தஞ்சத்தை நான் கண்டதில்லே என்கிறார்.

தகை சேர் நயனக் . கருணும்புயமும் வதனும்புயமும் கராம்புயமும் சரணும்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.

இப்படி நயனத் தாமரையிலிருந்து திருவடித் தாமரை வரையில் சொன்னதற்குக் காரணம் என்ன? .

அழகிய நயனத்தைக் கண்டார்; அது கருணே வழிந்து தோற்றியது. இங்கே நம் தாபம் தீரும்’ என்ற நம்பிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/68&oldid=680648" இலிருந்து மீள்விக்கப்பட்டது