பக்கம்:சரணம் சரணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலான புகலிடம் 59

உண்டாயிற்று. திருமுகத்தைக் கண்டார். அந்தக் கருனேயே மலர்ந்தாற் போல முகம் மலர்ந்திருந்தது. அம்பிகையின் அக மலர்ச்சியை அந்த முகம் காட்டியது. இப்போது தமக்கு நலம் விளேயும் என்ற உறுதிபெற்றரு ர். பிறகு கராம்புயங்களேக் கண்டார். ஒரு கை அஞ்சாதே என்று அபயம் காட்டியது. மற்றாெரு கை இங்கே பார் என்று வரத மூத்திரையுடன் திருவடியைச் சுட்டிக் காட்டியது. இதுவே நாம் புகல் புகுந்து தங்கி முத்தி யின்பத்தை அடையும் இடம் என்று அந்தச் சரணும்புயத் தைக் கண்டு கொண்டார்.

நயனம் கருனேக் குறிப்பையும், வதனம் கருணை மலர்ச்சியையும், திருக்கரங்கள் அபயத்தையும் வரதத்தை யும், திருவடி அமைதியையும் முறையே காட்டின. ஒவ் வொரு தாமரையாகக் கண்ட இந்த அன்பரின் மனமாகிய வண்டு இறுதியில் அன்னேயின் சரணும்புயத்தில் படிந்து இன்பத்தேனே உண்ணத் தொடங்கிவிட்டது. சரணமே மோட்சமாக இருப்பது.

பொக்கக் குடுலிற் புகுதா வகைபுண்ட

ரீகத்தினும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள்?? என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் இறைவ னுடய திருவடிகளேயே மோட்சமாகச் சொன்னர். பிேறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்’ என்ற குறளும் இறைவன் அடியே பிறவியினின்றும் விடுதலையை அருளும் வீடு என்று குறிப்பிடுகிறது.

ஆகவே, இறுதியில் சரணும்புயத்தை வைத்து, இந்த

அம்புயங்களேயன்றி வேறு தஞ்சத்தை நான் கண்டேன் இல்லை என்றார், வன்மையான பல பொருள் இருக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/69&oldid=680649" இலிருந்து மீள்விக்கப்பட்டது