பக்கம்:சரணம் சரணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சரணம் சரணம்

அவை பற்றுக்கோடு ஆவதில்லை. எம்பெருமாட்டி கோம ளாங்கி; அவள் அங்கங்கள் மெல்லிய தாமரைகள். அவை மென்மையாக இருந்தாலும் தஞ்சம் புகுந்த அடியாரைக் காக்கும் வன்மையுடையவை என்கிறார்.

அருணும் புயத்தும்,என் சித்தாம்

புயத்தும் அமர்ந்திருக்கும் தருணும் புயமுலேத் தையல்நல்

லாள்தகை சேர்நயனக் கருணும் புயமும் வதனும்

புயமும் கராம்புயமும் சரணும் புயமும் அல் லால்கண்டி லேன் ஒரு தஞ்சமுமே,

(செந்தாமரை மலரிலும் அடியேனுடைய உள்ளத் தாமரையிலும் எழுந்தருளியிருக்கும், தாமரை அரும்பு போன்ற தனங்களையுடைய பாலாம்பிகையாகிய நல்ல அன்னையின் அழகு சேர்ந்த கருணை பிறக்கும் விழியாகிய தாமரையும், திருமுகத் தாமரையும், திருக்கரங்களாகிய தாமரைகளும், திருவடிகளாகிய தாமரைகளும் அல்லாமல் வேறு ஒரு புகலிடத்தையும் அடியேன் கண்டதில்லே.

அருணம் - சிவப்பு சித்தம் - உள்ளம். தருணம்இளமை; தருணும்புயமென்றது தாமரை அரும்பைக் குறித் தது. தகை.அழகு. தஞ்சம் பற்றுக்கோடு; புகலிடம்.) எம்பெருமாட்டியே உண்மையான புகலிடம் என்பது

கருதது. .

இது அபிராமி அந்தாதியில் வரும் 38-ஆவது பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/70&oldid=680651" இலிருந்து மீள்விக்கப்பட்டது