பக்கம்:சரணம் சரணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் இயல்பு

பெரியவர்கள் எப்போதும் தங்களைக் குறைத்துக் கொண்டு பேசுவார்கள். சிறியவர்கள் தங்களேத் தாங் களே உயர்த்திக் கொள்வார்கள்.

‘பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை

அணியுமாம் தன்னே வியந்து: என்று திருவள்ளுவர் சொல்கிறார். தம்மைக் குறைவாகச் சொல்லிக் கொள்ளும் பெரியவர்களே, அவர்கள் வாய் மொழிப்படி சிறியவர்களென்று மற்றவர்கள் கருதுவ தில்லை. எல்லோரும் அவர்களைச் சிறப்பித்துப் பேசுவார் கள். அவர்கள் மட்டும் தங்களே இழித்துக் கொள்வார்கள். அது பணிவின் அடையாளம், அதல்ை அவர்களுடைய பெருமை மிகுதியாகிறது. இழிந்த மனமுடையவர்களோ, தம்மைப் பிறர் புகழ வகை இல்லே என்று எண்ணிக் கொண்டவர்களேப் போலத் தம் புகழைத் தாமே பறை படிப்பார்கள். இந்த இயல்பை எல்லாக் காலத்திலும் பார்க்கலாம்,

அருளாளர்களாகிய நால்வரும் ஆழ்வார்களும் தங் களேத் தாங்களே இழித்துச் சொல்லிக் கொள்வார்கள் ; புல்லியேன், நாயினேன், கடையனேன் என்று கூறிக் கொள்வார்கள். அப்படி அவர்கள் சொல்வதால் உலகம் ஏமாந்து போவதில்லை; அவர்களே இழிந்தவர்களாக எண்ணுவதில்லை. அவ்வாறே, இழிந்தவர்கள் என்னதான் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அவர்களே உலகம் மதிப்பதில்லே. - அபிராமிபட்டர் அன்னேயின் அருள் பெற்றவர். அவரும் தம்மைப் பல சமயங்களில் இழித்துப் பேசிக் கொள் கிறார், அன்னேயின் அருளைப் பெறுவதற்குரிய தகுதி தமக்கு இல்லை என்று சொல்கிறார். இதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/71&oldid=680652" இலிருந்து மீள்விக்கப்பட்டது