பக்கம்:சரணம் சரணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் இயல்பு

தம்மை இழித்துக்கொள்ளும்பொழுது, அன்னேக்கும் தமக்கும் உள்ள உறவைச் சுட்டிக்காட்டி, தம் இழிவை எண்ணுமல் அருள் செய்யவேண்டும் என்று இப்போது சொல்ல வருகிரு.ர்.

அம்பிகையின் திருவுருவத்தை நினைக்கிரு.ர். அம்பிகை கோமளமான திருமேனியை உடையவள். அவள் திருக் கரத்தில் படைக்கலன்களாகக் கொண்டவை கூட இனிய பொருளாகவும் மெல்லிய பொருளாகவும் இருக்கின்றன. வில்லும் அம்பும் வலிய இரும்பாலானவை யாகவும் கண்டாலே அச்சத்தை உண்டாக்குவனவாகவும் இருப் :பது இயல்பு. ஆல்ை அன்னே திருக்கரத்தில் கொண்ட வில்லோ இனிய கரும்பு; அம்புகளோ மென்மையும் மண மும் உள்ள மலர்கள். தன் கையில் உள்ள படைக்கலன் களேயே இனியவைகளாகக் கொண்டவள் தாய் என்றால் அவளுடைய உள்ளம் எவ்வளவு இனிமையாக, மென்மை யாக இருக்கும்! இதை எண்ணிப் பார்க்கிறர் அபிராமி பட்டர். நான் உன்னுடைய அருளேப் பெறும் வழியில் நிற்க அறியாதவனைலும் நீ என் தாய் அல்லவா? மிக மென்மையும் இனிமையும் உடையவள் அல்லவா? என்னே ஒறுக்காமல் ஆண்டருள வேண்டும்’ என்று விண்ணப் பித்துக் கொள்ள வருகிறவர், அப்பெருமாட்டியைக் கரும்பும் மலரும் ஏந்திய கோலத்தில் தியானிக்கிறார், ‘நீண்ட தனிவில்லும் ஐந்து அம்புகளும் முறையே கரும்பும் மலர்களுமாக இருக்க, அவற்றை ஏந்திக்கொண்டு என்றும் மாருமல் நிலைத்து நின்ற என் தாயே!) என்று விளிக்கிறார்,

ஒற்றை நீள் சிலேயும் அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய்! - அம்பிகை கரும்பை வில்லாகவும், ஐந்து மலர்களே அம்பாகவும் கொண்டவள் என்பதைப் பல இடங்களில்

இந்த ஆசிரியர் குறித்துள்ளார். அம்பிகையின் இடத் திருக்கரங்களில் மேலே உள்ள கரத்தில் கரும்பு வில் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/73&oldid=680654" இலிருந்து மீள்விக்கப்பட்டது