பக்கம்:சரணம் சரணம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் இயல்பு 65,

தம்முடைய நெஞ்சம் நல்வழிப்படவில்லையே என்று சொல்ல வருகிறவர், மனத்தை இனிய கரும்பு வில்லாக்கி துய்க்கும் தன்மாத்திரைகளே மலராக்கி ஏந்தும் பெரு. மாட்டியை நினைக்கிறர். தம் மனமும் புலனும் அப்படி ஆக வேண்டும் என்ற குறிப்பு இதில் அடங்கியிருக்கிறது.

மனமென்னும் கரும்பு வில்லையும் புலன் என்னும்: மலரம்புகளேயும் உடைய தேவியை நோக்கி அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

“தாயே, உன் அருளேப் பெறும் வழி ஒன்று உண்டு. இந்த வாழ் நாளேப் பெற்ற பயன் அந்த வழியில் சென்று: நன்மை அடைவதே. உன்னே எண்ணி அன்பு செய்து: வாழ்வதுவே தவம்; அதுவே சன்மார்க்கம். தவநெறி அது. உன்னே அடைய அந்த நெறிதான் ஏற்றது; நான் புக, லடைய வேண்டியது. வேறு வழியே இல்லே. இந்த அறிவு: எனக்கு இல்லே. என்னுடைய நெஞ்சத்தை இந்த வழிப் படுத்த நான் முயலவில்லை. நின் அருளே அடையும் வழி: யிலே என் மனம் பயிலவேண்டும். சாதனம் இன்றி ஒன் றைச் சாதிப்பார் உலகில் இல்லே. நின் தவநெறி, நின்னே அடைவதற்குரிய தவத்தை ஆற்றும் வழி; இதுவே தக்க சாதனம்; நான் கடைப்பிடிக்க வேண்டிய உபாயம். நான் இந்த வழியில் என் நெஞ்சத்தைப் பழக்கவில்லையே!’ என்கிறார்,

- ‘தஞ்சம் பிறிது இல்லே ஈது அல்லது’ என்று:

உன் தவநெறிக்கே - நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்!

[தஞ்சம்-சார்பு, பற்றுக்கோடு. உன் தவநெறியாகிய ஈது அல்லது பிறிது தஞ்சம் இல்லே.)

நெறி என்பது வழி. வழியில் மூன்று பகுதிகள் உண்டு; புறப்படும் இடம், சென்றுகொண்டிருக்கும் இடம், சென்று சேரும் இடம். இவற்றை முதல், இடை, முடிவு என்று. சொல்லலாம். புறப்படும் இடம் பிரபஞ்சம். நாம் எங்கே இருக்கிருேமோ, அங்கிருந்துதானே புறப்பட வேண்டும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/75&oldid=680656" இலிருந்து மீள்விக்கப்பட்டது