பக்கம்:சரணம் சரணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r சரணம் சமீணம்

சென்று சேரும் இடம் லட்சியம் அல்லது சாத்தியம். புறப் படும் இடத்துக்கும் சென்று அடையும் இடத்துக்கும் இடையே உள்ளது வழி. அந்த வழியின் பெயர் தான் தவநெறி. அபிராமிபட்டர் கூறும் இந்த நெறி எங்கிருந்து தொடங்குகிறது? நாம் இருக்கும் இடத்திலிருந்து தான். இந்த வழி கண்ணுக்குப் புலப்படும் இடத்தின் வகை அன்று வாழ்வின் பகுதி அல்லது வாழ்க்கை முறையே இந்த நெறி அல்லது வழி.

நாமும் அபிராமியட்டரும் இருக்கும் இடம் ஒன்று தான்; அதுதான் இந்தப் பிரபஞ்சம். அவர் இதிலிருந்து புறப்பட்டுவிட்டார். அதாவது நாம் வாழும் வாழ்க்கை முறையினின்றும் உயர்ந்து, வேறு முறையிலே சென்றார். சென்றாலும், செல்லவில்லேயே என்று இரங்குகின்றார். அந்த நெறி தவநெறி, சாதனம். அது சென்று சேரும் இடம் அம்பிகை. அதனல் அதை உன் தவ நெறி’ என் றர். திருச்சியிலிருந்து கோயம்புத்துார் செல்லும் சாலே ஒன்று இருக்கிறது. திருச்சி ரோடுகள் நன்றாக இருக், கின்றன என்னும்போது, அந்த ரோடும் அவற்றில் சேரும். கோயம்புத்துரர் ரோடு என்றும் அதற்குப் பெயர்; சென்று சேரும் இடம் பற்றிய பேர் அது. திருச்சியிலிருந்து புறப் படுகிறது; கோயம்புத்தூரை அடைகிறது. சாலே முழுவ தும் ஆலமரம் இருந்தால் ஆலமரச் சாலே என்றும் பெயர் பெறுகிறது. -

அதுபோல மக்களுக்குப் பயன்படுவதற்காக அமைந்த இந்த நெறி தவம் செய்யும் நெறி; ஆலமரச்சாலை என்று அடையாளம் காட்டுவதுபோல இதைத் தவநெறி என்றர். தவநெறியாவது பிறப்பறுப்பதற்குச் சாதனமான வழி; அம்பிகையின் அருட்செல்வத்தை அடையத் துணையாக உள்ள மாாக்கம்; பொறிகளின் வழியே மனம் செல்லாமல் அன்னேயையே நினைத்து ஒருமையுடன் வாழும் வகை. இது .தன்னுடைய லட்சியமாக அன்னையைக் கொண்டதா. தலின் இதுவே அன்னை நெறி என்றும் பெயர் பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/76&oldid=680657" இலிருந்து மீள்விக்கப்பட்டது